சின்ன வெங்காயம் கத்தரிக்காய் காரக்குழம்பு (Kaara kulambu Recipe in Tamil)

Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
Trivandrum
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 3/4 டீஸ்பூன்மிளகாய் தூள்
  2. 20சின்ன வெங்காயம்
  3. 10பூண்டுப்பற்கள்
  4. 1தக்காளி- - பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  5. 2கத்தரிக்காய்- - பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  6. 1 டேபிள் ஸ்பூன்மல்லித் தூள்-
  7. 1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள்-
  8. 1 டேபிள் ஸ்பூன்சாம்பார் தூள் -
  9. ஒரு சிட்டிகைபெருங்காயத்தூள்-
  10. தேவையான அளவுஉப்பு-
  11. 1புளி - எலுமிச்சை அளவு
  12. 1/4 டீ ஸ்பூன்வெந்தயம்
  13. 1/4 டீஸ்பூன்சீரகம்-
  14. ஒரு கொத்துகருலேப்பில்லை
  15. 1 1/2 டேபிள் ஸ்பூன்நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் புளி மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து புளி கரைசல் மட்டும் வடிகட்டி எடுத்து வைக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் வெந்தயம், சீரகம் பொடித்து கருலேப்பில்லை சேர்க்கவும்.

  3. 3

    பின்பு சின்ன வெங்காயம், பூண்டுப்பற்கள் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வெங்காயம் பொன்னிறம் ஆனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

  5. 5

    தக்காளி சிறிது வதங்கியதும் கத்தரிக்காய் சேர்த்து மிதமான சூட்டில் 5 நிமிடம்  வதக்கவும்.

  6. 6

    பின்பு மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சாம்பார் தூள், பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.

  7. 7

    பின்னர் கரைத்து வைத்துள்ள புளி கரைசல் சேர்த்து 10 நிமிடத்திற்கு மூடி வைத்து  கொதிக்க விடவும்.

  8. 8

    குழம்பு சிறிது கெட்டியாகும் வரை மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.

  9. 9

    சூடான சாதத்துடன் பரிமாறலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
அன்று
Trivandrum
Preparing healthy food for a healthy family
மேலும் படிக்க

Similar Recipes