சுரைக்காய் அப்பளக் கூட்டு (suraikkai appala Kootu Recipe in Tamil)

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468

#arusuvai5
#godenapron3
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள் உப்பு மிகவும் ருசியை கூட்ட கூடிய ஒன்றாகும்.உவர்ப்பு சுவையுடைய சுரைக்காயை சேர்த்து உப்புச் சுவையுடைய அப்பளத்தையும் சேர்த்து அருமையான ஒரு கூட்டு செய்து சூடான சாதத்துடன் நெய் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2கப் பொடியாக நறுக்கிய சுரைக்காய்
  2. 1கப் வேக வைத்த பாசிப்பருப்பு
  3. 4பொரித்த அப்பளம்
  4. 2ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
  5. 1ஸ்பூன் சோம்புத்தூள்
  6. 1ஸ்பூன் தாளிப்பு வடகம்
  7. 2 ஸ்பூன் நெய்
  8. 2 ஸ்பூன் எண்ணெய்
  9. 4ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம்
  10. 2ஸ்பூன் தக்காளி விழுது
  11. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிப்பு வடகம் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய சுரைக்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்

  2. 2

    பிறகு அதில் தக்காளி விழுது தக்காளி விழுதுஇரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு மஞ்சள் தூள் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். மிளகாய் வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்

  3. 3

    காய் நன்கு வெந்து கூட்டு பதம் வரும் பொழுது பருப்பு தேங்காய் துருவல் சோம்பு தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும் இப்பொழுது குழம்பை இறக்கி வைத்து அதன் மேல் நெய் ஊற்றி சாப்பிடுவதற்கு சற்று முன்பாக அப்பளத்தை நொறுக்கி அதன் மேல் தூவி சாதத்துடன் சுட சுட சாப்பிட சூப்பராக இருக்கும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes