கருப்பு உளுந்து களி (Karppu ulunthu kali recipe in Tamil)

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468

#ஆரோக்கிய உணவு.
ஆரோக்கிய உணவுகள் வரிசையில் கருப்பு உளுந்து இடம்பெறுகிறது.. பெண்கள் பூப்பெய்திய உடன் . முதலில் கொடுப்பது முட்டை நல்லெண்ணெய் உளுந்தங்களி ஆகியவை ஆகும். உளுந்தங்களி சாப்பிட இடுப்பு எலும்பு கர்ப்பப்பை போன்றவை மிகவும் வலுவடையும். உளுந்தை தோலோடு சமைத்து சாப்பிட பலன் அதிகம் எனவே கருப்பு உளுந்து வைத்து ஒரு உளுந்தங்களி பகிர்வதில் மகிழ்வு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

நான்கு பேருக்கு
  1. 200 கிராம்கருப்பு உளுந்து
  2. 100 கிராம்சிவப்பு அரிசி
  3. 200 கிராம்கருப்பட்டி (பனை வெல்லம்)
  4. தேவையான அளவுநல்லெண்ணெய் அல்லது நெய்
  5. ஒரு துண்டுசுக்கு
  6. ஒரு முந்திரிஅலங்கரிக்க

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கறுப்பு முழு உளுந்து சேர்த்து வறுக்கவும். பின் சிவப்பு அரிசியை வறுக்கவும்.இறக்குவதற்கு முன்பு சுக்கையும் அதில் போட்டு இரண்டு பிரட்டு பிரட்டி இறக்கவும்

  2. 2

    இப்பொழுது அரிசி உளுந்து சுக்கு இவை ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுக்கவும். ஒரு கடாயில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து பனைவெல்லத்தை அதில் சேர்த்து கரையும் வரை கலக்கி விடவும் கரைந்ததும் அதை வடிகட்டி எடுத்து கடாயில் ஊற்றி கொதிக்கவிடவும்.

  3. 3

    பனை வெல்லம் பாகு கொதித்து கொண்டிருக்கும்பொழுது அரைத்து வைத்த மாவை இரண்டு டம்ளர் தண்ணீரில் கரைத்து பாகுடன் சேர்த்து கைவிடாமல் கட்டி தட்டாமல். கிளறவும். அது ஓரளவு கெட்டியாக வந்தவுடன் நல்லெண்ணெ அல்லது நெய் கிளறி ஊற்றி கிளறிவிடவும். நல்லெண்ணெய் சேர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது இப்பொழுது சட்டியில். ஒட்டாத அளவு வரும்பொழுது இறக்கவும்

  4. 4

    இப்பொழுது ஒரு நெய் தடவிய பவுலில் உளுந்தங்களிபோட்டு நன்கு பரப்பி பிளேட்டில் கவிழ்த்து எடுத்தால் உளுந்தங் களி ரெடி..ஒரு முந்திரி வைத்து அலங்கரித்து பரிமாறவும் இப்பொழுது கருப்பு உளுந்து களி தயார் இது சாப்பிட மிக மிக சுவையாகவும் உடலுக்கு நன்கு வலு சேர்க்கும் அருமருந்தாகவும் உதவுகிறது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes