கருப்பு உளுந்தங்களி (Karuppu ulunthankali recipe in tamil)

Chitra Kumar
Chitra Kumar @cook_16899134

#jan1 பாசிப்பருப்பு எவ்வளவு நல்லதோ உடம்பிற்கு அதைவிட பல மடங்கு உயர்ந்தது கருப்பு உளுந்து தொலி உளுந்து என்றும் முழு உளுந்து என்றும் சொல்வார்கள் ஆண் பெண்கள் அனைவருக்கும் இந்த உணவு உளுந்து ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் சிறு குழந்தைகளுக்கு தினமும் ஒரு உளுந்து வடை கொடுப்பது மிகவும் நல்லது

கருப்பு உளுந்தங்களி (Karuppu ulunthankali recipe in tamil)

#jan1 பாசிப்பருப்பு எவ்வளவு நல்லதோ உடம்பிற்கு அதைவிட பல மடங்கு உயர்ந்தது கருப்பு உளுந்து தொலி உளுந்து என்றும் முழு உளுந்து என்றும் சொல்வார்கள் ஆண் பெண்கள் அனைவருக்கும் இந்த உணவு உளுந்து ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் சிறு குழந்தைகளுக்கு தினமும் ஒரு உளுந்து வடை கொடுப்பது மிகவும் நல்லது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி
3 பரிமாறுவது
  1. 1கப்கருப்பு உளுந்து
  2. 3கப்பச்சரிசி
  3. உப்பு
  4. நல்லெண்ணெய்
  5. கருப்பட்டி அல்லது வெல்லம்

சமையல் குறிப்புகள்

1/2மணி
  1. 1

    கருப்பு உளுந்தை நன்கு வாசம் வரும் வரை வறுக்க வேண்டும் அதை பச்சரிசியுடன் மெஷினிலோ அல்லது மிக்ஸியிலோ மாவாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    இந்த மாவை தேவைப்படும்போது நாம் தனியாக செய்து சாப்பிடலாம்

  3. 3

    ஒரு கப் மாவு எடுத்து 2 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ள வேண்டும்

  4. 4

    அடிகனமான சட்டியில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்கும்போது கரைத்து வைத்துள்ள மாவை நூற்றி நன்கு கிண்ட வேண்டும் கெட்டுவிடாமல் குறைந்தது 20 நிமிடம் கை விடாமல் கிண்டி வேக விட வேண்டும்

  5. 5

    வெந்துவிட்டதா என்று பார்க்க ஒரு ரகசியம் கையை தண்ணீரில் முக்கி அந்த மாவை தொடும்போது கையில் ஒட்டக் கூடாது அதுதான் எந்த பழம் ஓட்டினால் இன்னும் அடுப்பை குறைத்து வைத்து குறைந்த தீயில் நான்கு துடுப்பு வைத்து கிண்ட வேண்டும்

  6. 6

    வெந்ததும் எடுத்து தட்டில் வைத்து தண்ணீரில் கையை அமுக்கி குழி போல் அமுக்கி கருப்பட்டி போட்டு மென்றால் கலியின் சூட்டிற்கு உருகிவிடும் அதில் நல்லெண்ணை விட்டு சாப்பிடக் கொடுக்க வேண்டும் ஒரு விரலில் கழியை எடுத்து நல்லெண்ணெய் கருப்பட்டி கலவையில் தொட்டு சாப்பிட தேவாமிர்தமாக இருக்கும் கருப்பட்டி பிடிக்கவில்லையென்றால் மண்ட வெல்லம் அச்சு வெல்லம் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்

  7. 7

    இது எனது பாட்டி என் அம்மா எனக்கு செய்துகொடுத்த உடல் நலத்தை காக்கக்கூடிய ஒரு சத்தான உணவு இந்த வயதிலும் எனக்கு பலன் கொடுக்கக் கூடியது இதையே என் பொண்ணுக்கும் ஐந்து வயதிலிருந்து கொடுத்து வருகிறேன் இப்போதும் மாதா மாதம் மூன்று நாட்கள் கட்டாயம் எங்கள் வீட்டில் உளுந்தங்களி உண்டு

  8. 8

    வயதிற்கு வந்த பெண்கள் கர்ப்பமான பெண்கள் வயதானவர்கள் குழந்தை பெற்றோர்கள் அனைவருக்கும் கட்டாயம் கொடுக்க வேண்டும் இடுப்பு எலும்பு வலுபெறும் மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உடல் சோர்வை நீக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chitra Kumar
Chitra Kumar @cook_16899134
அன்று

Similar Recipes