ப்ரூட் கஸ்டர்ட் (Fruit Custard Recipe in Tamil)

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

# பார்ட்டி

ப்ரூட் கஸ்டர்ட் (Fruit Custard Recipe in Tamil)

# பார்ட்டி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2லிட்டர் பால்
  2. 2டேபிள்ஸ்பூன் வெனிலா கஸ்டர்ட் பவுடர்
  3. 8டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  4. 1கப் பொடியாக நறுக்கிய பழங்கள் கலவை
  5. சிறிதுட்டூட்டி ப்ரூட்டி
  6. 2டேபிள்ஸ்பூன் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    1/2 லிட்டர் பாலிலிருந்து 1/4 கப் அளவிற்கு தனியாக எடுத்து கொண்டு பின் கொதிக்க விடவும்

  2. 2

    தனியாக எடுத்து வைத்துள்ள பாலில் கஸ்டர்ட் பவுடர் ஐ சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்

  3. 3

    பால் கொதிக்கும் போது கரைத்து வைத்துள்ள கஸ்டர்ட் கரைசலை ஊற்றி நன்கு கிளறவும்

  4. 4

    சற்று திக்கானதும் சர்க்கரை சேர்த்து கிளறவும்

  5. 5

    பின் இறக்கி ஆறவிட்டு பிரிட்ஜில் வைத்து குளிரவிடவும்

  6. 6

    ஆப்பிள் மாதுளை கிவி பழம் அன்னாச்சி ஆகியவற்றை(விருப்பமானபழங்கள்) பொடியாக நறுக்கி 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு பின் குளிரவிடவும்

  7. 7

    குளிரவிட்ட கஸ்டர்ட் ஐ ஒரு முறை நன்கு பீட் செய்து கொள்ளவும்

  8. 8

    பரிமாறும் போது சின்ன சின்ன கிண்ணத்தில் பழங்கள் ஐ போட்டு கஸ்டர்ட் ஐ ஊற்றவும்

  9. 9

    பின் மேல் ட்டூட்டி ப்ரூட்டி மற்றும் நட்ஸ் ஐ தூவி அலங்கரித்து 1/2 மணி நேரம் வரை குளிரவிட்டு ஜில் என்று பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes