பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil)

# பொங்கல்
பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil)
# பொங்கல்
சமையல் குறிப்புகள்
- 1
பொட்டுக்கடலை முறுக்கு செய்ய:
- 2
அரிசி ஐ 1_1/2 மணி நேரம் வரை ஊறவிடவும்
- 3
மிளகாயை தனியாக ஊறவிடவும்
- 4
பின் இரண்டு முறை அலசி வடிகட்டி கிரைண்டரில் போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும்
- 5
மிக்ஸியில் கறிவேப்பிலை சீரகம் ஊறவைத்த வரமிளகாய் பெருங்காயத்தூள் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்
- 6
பின் அரைத்த விழுதை கிரைண்டரில் அரிசி உடன் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்
- 7
உளுந்தை வெறும் வாணலியில் போட்டு நிறம் மாறாமல் மெல்லிய தீயில் வைத்து நிதானமாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்
- 8
பொட்டுக்கடலை ஐ மிக்ஸியில் போட்டு நைசாக பவுடர் செய்து கொள்ளவும்
- 9
பின் உளுந்து மற்றும் பொட்டுக்கடலை மாவு ஐ தனித்தனியாக ஜலித்து கொள்ளவும்
- 10
எள் மற்றும் ஓமம் ஆகியவற்றை கல் மண் போக சுத்தம் செய்து அலசி வைக்கவும்
- 11
பின் அரைத்து எடுத்த மாவுடன் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 12
பின் அரித்து அலசி வைத்துள்ள எள் மற்றும் ஓமம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 13
பின் உளுந்து மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 14
பின் பொட்டுக்கடலை மாவு ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 15
பின் நெய்யை சூடாக்கி சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 16
கைகளில் ஒட்டாமல் வரும் வரை பிசைந்து கொள்ளவும்
- 17
பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்
- 18
முறுக்கு அச்சில் எண்ணெய் தடவி மாவை நிரப்பவும்
- 19
பின் சூடான எண்ணெயில் பிழிந்து விட்டு இளஞ்சிவப்பாக பொரித்து எடுக்கவும்
- 20
சுவையான பொட்டுக்கடலை முறுக்கு ரெடி
- 21
தேங்காய் பர்பி:
- 22
தேங்காய் ஐ இளந்தேங்காய் ஆக இல்லாமல் முற்றிய வரகாயாகவும் இல்லாமல் ஓரளவிற்கு இருக்கும் தேங்காய் ஆக தேர்ந்தெடுக்கவும்
- 23
தேங்காயின் அடி வரை துருவாமல் வெள்ளை பகுதியை மட்டும் துருவி எடுக்கவும்
- 24
பின் வெறும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் இல்லாமல் இரண்டு மூன்று முறை சுற்றி எடுக்கவும்
- 25
பின் நன்கு அளந்து கொள்ளவும்
- 26
பின் அதே அளவு சர்க்கரை ஐ அளந்து கொள்ளவும்
- 27
பின் ஏலக்காய் உடன் சர்க்கரை சேர்த்து பொடி செய்து கொள்ளவும்
- 28
அடி கணமான வாணலியில் சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து முதலில் நன்கு கரைக்கவும்
- 29
சர்க்கரை கரைந்ததும் அடுப்பை பற்ற வைத்து மெல்லிய தீயில் வைத்து கொதிக்க விடவும்
- 30
சர்க்கரை ஒரு கம்பி பதம் வந்ததும் அளந்து வைத்துள்ள தேங்காய் துருவல் மற்றும் பொட்டுக்கடலை ஐ சேர்த்து நன்கு கிளறவும்
- 31
தேங்காய் சர்க்கரை பாகுடன் சேர்ந்து நன்கு வெந்து கொதித்து திக்காக சுண்டி வரும் போது நெய் விட்டு தொடர்ந்து கிளறவும்
- 32
அடியில் வெளுத்து ஓரங்களில் நுரைத்து பொங்கி வரும் போது இறக்கி நெய் தடவிய ட்ரேயில் கொட்டி சமப்படுத்தவும்
- 33
பின் ஆறியதும் துண்டுகள் போடவும்
- 34
சுவையான மணமான தேங்காய் பர்பி ரெடி
- 35
சர்க்கரை முழுவதும் கரைந்த பின் அடுப்பை பற்ற வைக்க வேண்டும்
- 36
பாகு பதம் மிகவும் முக்கியமானது அதே போல் வாணலியில் ஒட்டாமல் கெட்டியாக நுரைத்து வரும் போது இறக்க வேண்டும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
முறுக்கு (Murukku recipe in tamil)
#pongalஇந்த முறை குக்பேட் ல இருந்து வாங்கிய பரிசு முறுக்கு பிடி எவ்வளவு விதவிதமான அச்சுஒரே மாவு விதவிதமான முறுக்கு🙏 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#deepavaliகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் பட்டர் முறுக்கு Vaishu Aadhira -
-
முறுக்கு (Murukku recipe in tamil)
எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,இது ஒரு ஹைபிரிட் ரெஸிபி முள்ளு முறுக்கு-தேன்குழல். Enriched unbleached wheat flour கூட கடலை மாவு, உளுத்தம் மாவு சேர்த்து செய்தது . வாசனைக்கும், ருசிக்கும் பொடித்த எள்பொடித்ததால் வெள்ளையாக இல்லை. பொடிக்காமல் எள் சேர்த்தால் வெள்ளையாக இருக்கும். உங்கள் விருப்பம். #flour1 Lakshmi Sridharan Ph D -
பூண்டு கார முறுக்கு (Poondu kaara murukku recipe in tamil)
#Deepavali # kids2இது என் அம்மாவின் தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி ஆகும். என்னம்மா கோதுமை அல்வா மிக அருமையாக செய்வார்கள்.அதேபோல் சீப்பு பணியாரம் பாசி பருப்பு முறுக்கு பயத்தம் உருண்டை பூண்டு முறுக்கு ஓட்டு பக்கோடா போன்றவை தீபாவளிக்கு மிக அருமையாக செய்வார்கள். நான் இப்பொழுதுதான் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு வருகிறேன். இது என்னுடைய குக் பாடிர்க்கான முயற்சி. Meena Ramesh -
-
-
-
-
ஒரே மாவில் நான்கு விதமான முறுக்கு
சின்னவங்க முதல் பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் பிடிச்ச முறுக்கு எப்படி பண்றதுன்னு பார்க்கலாம் தயா ரெசிப்பீஸ் -
-
முறுக்கு(Murukku recipe in tamil)
#Npd2சாதத்தை வத்தல் வடாம் போடாம அரைத்து இந்த மாதிரி முறுக்கு சுட்டு கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
முறுக்கு (Murukku recipe in tamil)
#TRENDING தீபாவளிக்கு வீட்டில் செய்யும் பலகாரம் முறுக்கு மாவு அரைக்காமல் மிக மிக எளிமையான முறையில் செய்யலாம் Sarvesh Sakashra -
-
-
வெள்ளை சாதம் பொட்டுக்கடலை முறுக்கு (white rice murukku)
#leftoverமீந்துபோன சாதத்தை வீணாக்காமல் இப்படி முறுக்கு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Afra bena -
-
-
-
-
மிருதுவான முறுக்கு (Murukku recipe in tamil)
முருக்கு என்பது இந்திய துணைக் கண்டத்தில் இருந்து உருவான ஒரு சுவையான, முறுமுறுப்பான சிற்றுண்டாகும். முருக்கு தீபாவளிக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் பாரம்பரிய சிற்றுண்டி #deepavali #kids Christina Soosai -
-
More Recipes
- வெஜிடபிள் சேமியா (vegetable semiya recipe in Tamil)
- அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு (araithu vitta verkadalai kulambu recipe in Tamil)
- ஆலூ சப்பாத்தி (aloo chappathi recipe in Tamil)
- கிராமிய சர்க்கரை பொங்கல் (sarkkarai pongal recipe in Tamil)
- வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
கமெண்ட்