கிராமிய சர்க்கரை பொங்கல் (sarkkarai pongal recipe in Tamil)

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
10 நபர்கள்
  1. 1 டம்ளர்பச்சரிசி
  2. 2 தேக்கரண்டியளவுபாசிப்பருப்பு
  3. 2 தேக்கரண்டியளவுகடலைப்பருப்பு
  4. 4 தேக்கரண்டியளவுநெய்-
  5. 4ஏலக்காய்
  6. தேவையான அளவுமுந்திரி உலர் திராட்சை
  7. 1/2 டம்ளர்பசும் பால்
  8. 2 டம்ளர்வெல்லம் -

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் இந்த பொங்கல் அனுபவம் பற்றி கூறுகிறேன்.. என் பாட்டி செய்முறை சொல்லி கொடுத்த முறை... காணும் பொங்கல் அன்று பசுக்களை வைத்து பூஜை செய்ய இந்த முறை பொங்கல் வைத்து வணங்குகின்றனர்..

  2. 2

    முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். பாசிப்பருப்பு வறுத்து அதை அரிசியுடன் சேர்த்து நன்கு அலசி ஊற வைக்கவும். கடலைப்பருப்பு 1/2 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

  3. 3

    நான் மண் பானையில் செய்வதால், முதலில் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.(1:5 விகிதத்தில்).. தண்ணீர் கொதித்ததும் அரிசி மற்றும் பருப்புகளை சேர்த்து நன்கு கலந்து மசியும் வரை வேகவிடவும். குக்கர் என்றால் அரிசி மற்றும் பருப்புகளை தேவையான அளவு நீர் சேர்த்து கலந்து 4-5 விசில் விடவும்.

  4. 4

    ஏலக்காய் மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்... மற்றொரு கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் முந்திரி உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து பொங்கலில் கலந்து இறக்கவும்.

  5. 5

    கடலைப்பருப்பு வாயில் கணிப்பும் விதத்தில் இருக்கும்.. சுவையான சர்க்கரை பொங்கல் ரெடி.. நன்றி.. ஹேமலதா கதிர்வேல்... கோவை பாசக்கார பெண்கள்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes