முட்டைகோஸ் ஹல்வா Cabbage Halwa

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#மகளிர

சாதனைகளோடு சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பக விருட்சம் தான் பெண்கள் .
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் 💃💃

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 mins
4 பரிமாறுவது
  1. முட்டைகோஸ் 1/2 கப்
  2. நெய் 1/2 கப்
  3. பால் 2 கப்
  4. சர்க்கரை 1/2 கப்
  5. ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
  6. முந்திரி 8
  7. பாதாம் 6

சமையல் குறிப்புகள்

45 mins
  1. 1

    முட்டைகோஸ் பொடியாக நறுக்கி கழுவி வைக்கவும்.சர்க்கரை 1/2 கப் எடுத்து வைக்கவும்.பால் 2 கப் எடுத்து வைக்கவும்.வெறும் கடாயில் நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும்.பச்சை வாசனை போய்விடும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து வதக்கவும்.

  2. 2

    நெய் 1/2 கப் எடுத்து வைக்கவும்.ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன் எடுத்து வைக்கவும் முட்டைகோஸ் கடாயில் வதக்கியதில் பால் சேர்த்து வேக விடவும்.பாலில் நன்கு வேக விடவும்.அடிக்கடி கிளறி கொண்டு இருக்கவும்.

  3. 3

    கிளறிக்கொண்டு இருக்கவும்.பாலில் முட்டைகோஸ் வெந்தவுடன் சர்க்கரை சேர்க்கவும்.

  4. 4

    சர்க்கரை கரைந்து கெட்டி பதம் வந்தவுடன் நெய் சேர்க்கவும்.இப்போது ஹல்வா பதம் வந்து விடும்.கிளறிக்கொண்டு இருக்கவும்.வேறு கடாயில் நெய் சேர்த்து பொடித்த முந்திரி பாதாம் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.

  5. 5

    சுவையான முட்டைகோஸ் ஹல்வா ரெடி.புதியவகையாக முட்டைகோஸில் தயார் செய்து பார்த்தேன்.சுவை சூப்பர்.முட்டைகோஸ் பிடிக்காதவர்கள் கூட ஹல்வாவை விரும்பி சாப்பிடுவர்.செய்து பாருங்கள்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes