கோதுமை வாழைப்பழ பன்கேக்

Eswari
Eswari @eswari_recipes

#ஸ்னாக்ஸ்
குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான எளிதில் செய்ய கூடிய சுவையான பன்கேக். மைதா மற்றும் வெள்ளை சக்கரைச் சேர்க்காத சத்தான இந்த ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்.

கோதுமை வாழைப்பழ பன்கேக்

#ஸ்னாக்ஸ்
குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான எளிதில் செய்ய கூடிய சுவையான பன்கேக். மைதா மற்றும் வெள்ளை சக்கரைச் சேர்க்காத சத்தான இந்த ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2பழுத்த நெந்திர வாழைப்பழம்
  2. 1கப் கோதுமை மாவு
  3. 1/2கப் அரிசிமாவு
  4. 3 tbspரவை
  5. 1சிட்டிகை உப்பு
  6. 1/2கப் பொடித்த வெல்லம்
  7. 2கப் தண்ணீர்
  8. நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மிக்ஸ்சியில் வாழைப்பழம் மற்றும் பொடித்த வெல்லம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  2. 2

    அரைத்த கலவையுடன் கோதுமை மாவு, அரிசி மாவு, ரவை, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.

  3. 3

    15 நிமிடம் கழித்து தோசை கல்லில் உங்கள் விரும்பமான வடிவத்திற்கு ஊற்றி இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும். தோசையைச் சுற்றி நெய் ஊற்றிக் கொள்ளலாம்.

  4. 4

    சூடாக பரிமாறவும். நீங்கள் விரும்பினால் இதை பனியாரச் சட்டியில் ஊற்றி பனியாரமாகவும் செய்து கொள்ளலாம்.

  5. 5

    குறிப்பு:1) நன்றாக பழுத்த வாழைப்பழத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.2) சிறிய வாழைப்பழம் என்றால் 2 பயன்படுத்தவும், பெரிய பழம் என்றால் ஒரு பழம் போதுமானது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Eswari
Eswari @eswari_recipes
அன்று
Passionate about cooking healthy recipes for my family. HAPPY COOKING! HEALTHY LIVING!! 😃
மேலும் படிக்க

Similar Recipes