கிரிஸ்பி எஃக் ட்ரையாங்கிள்🍳

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#ஸ்னாக்ஸ்
எப்பொழுதும் ஆம்லெட் செய்வதற்கு ஆம்லெட்டை இப்படி டிஃபரண்டாக செய்து கட்லெட் மாதிரி கொடுத்து பாருங்கள் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 4 முட்டை
  2. உப்பு தேவைக்கேற்ப
  3. 4டேபிள்ஸ்பூன் மைதா மாவு
  4. மிளகுத்தூள்
  5. 1டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவு
  6. 1/2டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
  7. 1/2டீஸ்பூன் கரம் மசாலா
  8. 1 கப் ரஸ்க் தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முட்டையை நன்கு பீட் செய்து,தேவைக்கேற்ப உப்பு,மிளகுத்தூள் சேர்த்து தடினமான ஆம்லெட் ஆக சுட்டெடுக்கவும். ஆம்லெட்டை சிறுசிறு முக்கோணமாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, கார்ன்ஃப்ளார் மாவு,சிறிது சிவப்பு மிளகாய் தூள்,தேவைக்கேற்ப உப்பு,கரம் மசாலா சேர்த்து தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

  3. 3

    வெட்டிய ஆம்லெட்டை கலந்த மாவில் டிப் செய்து, ரஸ்க் தூளில் பிரட்டி தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி டோஸ்ட் செய்து எடுக்கவும்.

  4. 4

    சுவையான கிரிஸ்பி எஃக் ட்ரையாங்கிள் ரெடி. விருப்பப்பட்டால் இதை எண்ணெயில் பொறித்து சாப்பிடலாம்.வெயில் காலத்தில் எண்ணெய் குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது,அதனால் நான் தோசைக்கல்லில் டோஸ்ட் செய்து எடுத்தேன்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes