மார்ஷ்மல்லோ

Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
ஓசூர்

#book
#ஸ்னாக்ஸ்

மார்ஷ்மல்லோ

#book
#ஸ்னாக்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 200 கி சர்க்கரை
  2. 1டேபிள்ஸ்பூன் ஜெலட்டின்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஜெலட்டின் எடுத்து சுடுதண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  2. 2

    அரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும், கொதித்ததும் சர்க்கரை சேர்த்து பிசுபிசுப்பு தன்மை வரும் வரை கொதிக்க விடவும்.

  3. 3

    நாம் கரைத்து வைத்துள்ள ஜெலட்டினை சர்க்கரை பாகுடன் சேர்த்து கொதிக்க விடவும். இது சிறிது நேரத்தில் நூல் போல் பதம் வரும் அப்போது அடுப்பிலிருந்து இறக்கவும்.

  4. 4

    இது வெதுவெதுப்பாக ஆனதும் பீடரை கொண்டு முதலில் ஸ்லோ ஸ்பீடில் வைத்து பீட் செய்யவும் பின் வேகமாக வைத்து பீட் செய்யவும். இது ஒரு ஆறு நிமிடம் வரை இவ்வாறு செய்ய வேண்டும்.

  5. 5

    இதன் நிறம் வெண்மையாக மாறும். பின் க்ரீம் போல் பதம் வந்தவுடன் நிறுத்தலாம்.

  6. 6

    ஒரு ஏர் டைட் கண்டெய்னரில் சமயல் எண்ணெய் 1 டீஸ்பூன் சேர்த்து தடவவும். பின் அதனுள் ஊற்றி குறைந்தபட்சம் 8 மணி நேரம் மூடி வைக்கவும்.

  7. 7

    கூர்மையான பொருளைக் கொண்டு ஓரங்களில் எடுக்கவும். பின் சர்க்கரை பொடி தூவிய தட்டில் இந்தனை வைக்கவும்.

  8. 8

    பின் கத்தியை கொண்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். வெட்டும் போது சர்க்கரை பொடியை தூவவும் இல்லையெனில் கையில் ஒட்டும்.

  9. 9

    சுவையான மர்ஷ்மெல்லோ தயார். இதனை ஏர் டைட் கண்டெய்னரில் 3 நால்களுக்குள் வைத்து உண்ணலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
அன்று
ஓசூர்
செய்ய முடியாதது எதுவும் இல்லை
மேலும் படிக்க

Similar Recipes