வெந்தய இட்லி

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#இட்லி

இட்லி !!
ஆம் நாம் உளுந்து இட்லி, ராகி இட்லி குஷ்பூ இட்லி ,கோதுமை இட்லி என்று பல வகைகள் இட்லி செய்து இருப்போம். வெந்தய இட்லி வணக்கிய வெங்காய சட்னி எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்கிறோம் .வெந்தயம் குளிர்ச்சி தரக்கூடியது .உடலுக்கும் உள்ளத்துக்கும் ஏற்றது. சத்தானது.சுவையானது .

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30Mins
4 பரிமாறுவது
  1. இட்லி அரிசி 1/2 படி
  2. வெந்தயம் 1/2 கை பிடி
  3. உப்பு 1/2 பிடி
  4. கொட்ட முத்து 4
  5. கரைக்க
  6. சமையல் சோடா 1/2 டீஸ்பூன்
  7. தண்ணீர் 1/2 கப்

சமையல் குறிப்புகள்

30Mins
  1. 1

    இட்லி அரிசி 1/2 படி கழுவி ஊறவிடவும்.வெந்தயம் 1/2 கை பிடிச்சை எடுத்து கழுவி தனியாக ஊற விடவும்.கொட்ட முத்து 4 எடுத்து வைக்கவும்,கழுவி தோல் நீக்கி வைக்கவும். 3 மணி நேரம் ஊற விடவும்.ஊறிய வெந்தயத்தை முதலில் மாவு அரைக்கும் கிரைண்டரில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அதனுடன் கொட்ட முத்து 4, அரிசியை சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும். உப்பு போட்டு கலக்கி வைக்கவும்.கொட்ட முத்து சேர்ப்பதால் இட்லி மிருதுவாக இருக்கும்.

  2. 2

    மறுநாள் இட்லி ஊற்றும் போது அதில்,தண்ணீர்1/2 கப் கொதிக்க வைத்து 1/2 டீஸ்பூன் சமையல் சோடா சேர்த்து கலக்கி ஆற விடவும்.வெது வெதுப்பாக இருக்கும் போது மாவில் சேர்த்து கலக்கி விடவும்.உளுந்து இட்லி மாவு 1 கரண்டி கடைசியாக சேர்த்து கலக்கி வைக்கவும்.இட்லி மாவு சேர்ப்பதால் இட்லி மேலும் சுவையாக இருக்கும்.

  3. 3

    இட்லி தட்டில் நெய் அல்லது நல்லெண்ணை தடவி இட்லி ஊற்றவும்.ஆவியில் 10 முதல் 12 நிமிடம் வேக விடவும்.சுவையான மிருதுவான வெந்தய இட்லி ரெடி.😋😋

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (5)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
கொட்ட முத்து சேர்க்க வேண்டுமா.. உடல் நலத்திற்கு நல்லதா?

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes