வேப்பம்பூ ரசம்

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#immunity

வேப்பம்பூ ரசம் .வேப்பம்பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும். வேப்பம் பூ நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .இதில் துவையல் ,ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும் .குமட்டல் மயக்கம் குணமாகும் .

வேப்பம்பூ ரசம்

#immunity

வேப்பம்பூ ரசம் .வேப்பம்பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும். வேப்பம் பூ நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .இதில் துவையல் ,ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும் .குமட்டல் மயக்கம் குணமாகும் .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20Mins
3 பரிமாறுவது
  1. 1 கை பிடி வேப்பம்பூ
  2. 1 தக்காளி
  3. 4 பல் பூண்டு
  4. 1/2 கப் புளி தண்ணீர்
  5. 1/2 கப் பருப்பு தண்ணீர்
  6. 1/2 கப் தண்ணீர்
  7. 1 டேபிள் ஸ்பூன் ரசம் பொடி
  8. உப்பு
  9. தாளிக்க
  10. 2டீஸ்பூன் நெய்
  11. 1/2டீஸ்பூன் கடுகு
  12. 1/2டீஸ்பூன் சீரகம்
  13. பெருங்காயம்
  14. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20Mins
  1. 1

    வேப்பம் பூ வை காயவைத்து எடுத்து வைக்கவும்.1 கை பிடி தேவை.தக்காளி 1 கழுவி நறுக்கி வைக்கவும்.

  2. 2

    புளி 1 சிறிய எலுமிச்சை அளவு எடுத்து கரைத்து 1/2 கப் புளி தண்ணீர் எடுத்து வைக்கவும். துவரம் பருப்பு வேக வைத்து பருப்பு +பருப்பு தண்ணீர் 1/2 கப் எடுத்து வைக்கவும்.கடாயில் நெய் 1 டீஸ்பூன் ஊற்றி வேப்பம்பூவை வதக்கி எடுத்து தனியாக வைக்கவும்.

  3. 3

    கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கடுகு 1/2 டீஸ்பூன்,சீரகம் 1/2 டீஸ்பூன்,பெருங்காயம் கருவேப்பிலை தாளித்து புளி தண்ணீர் தக்காளி கரைத்தது ஊற்றி,ரசம் பொடி 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து கொதிக்க விட்டு பருப்பு + பருப்பு தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

  4. 4

    கொதிக்க விட்ட ரசத்தை வதக்கி வைத்த வேப்பம்பூவில் சேர்த்து கலக்கி விடவும்.

  5. 5

    வேப்பம் பூ ரசம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes