ஸ்பான்ஜி இட்லி மற்றும் சாம்பார்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35 minutes
3 பரிமாறுவது
  1. இட்லி அரிசி 3 டம்ளர்
  2. உளுத்தம்பருப்பு 1 டம்ளர்
  3. வெந்தயம் 1 ஸ்பூன்
  4. இட்லி சாம்பார் செய்ய :
  5. துவரம் பருப்பு 50 கிராம்
  6. பச்சை மிளகாய் 1
  7. பாசிப்பருப்பு 100 கிராம்
  8. வெங்காயம் 1
  9. சின்ன வெங்காயம் 6
  10. தக்காளி 2
  11. கறிவேப்பிலை சிறிதளவு
  12. சாம்பார் தூள் 2 ஸ்பூன்
  13. கொத்தமல்லி சிறிதளவு
  14. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  15. உப்பு தேவையான அளவு
  16. பூண்டு பல் 4
  17. பெருங்காயத்தூள் சிறிதளவு
  18. தண்ணீர் தேவையான அளவு
  19. எண்ணெய் 2 மேசைக்கரண்டி
  20. கடுகு 1 ஸ்பூன்
  21. சீரகம் 1 ஸ்பூன்
  22. மிளகு 1 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

35 minutes
  1. 1

    முதலில் அரிசியை தனியாக ஒரு பவுலில் எடுத்து வைக்கவும். உளுத்தம்பருப்பு, வெந்தயம் இவற்றை தனியாக பவுலில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு கிரைண்டரில் சேர்த்து அரைத்து எடுத்து உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு 8 மணி நேரம் அப்படியே வைத்து விடவும்.

  2. 2

    8 மணி நேரம் கழித்து மாவு நன்கு புளித்து இட்லி செய்வதற்கு தயாராகி விட்டது. பிறகு அடுப்பில் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இட்லி தட்டில் மாவை ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைக்கவும். ஸ்பான்ஜியான இட்லி தயார்.

  3. 3

    சாம்பார் செய்ய: குக்கரில் பருப்புகளை எடுத்து தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி சுத்தம் செய்து இதில் பூண்டு பல், வெங்காயம், தக்காளி நீளமாக கட் செய்தது, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் 1/2 டம்ளர் ஊற்றி மூடி போட்டு 3 விசில் விட்டு இறக்கவும்.

  4. 4

    பின்னர் மத்து வைத்து நன்கு மசித்து விடவும். அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு, சாம்பார் தூள் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்.பிறகு தாளிப்பதற்கு சின்ன வெங்காயம் நீளமாக கட் செய்து வைத்து கொள்ளவும்.

  5. 5

    அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், மிளகு சேர்த்து வெங்காயம், பெருங்காயத்தூள் கறிவேப்பிலை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி சாம்பாரில் சேர்த்து நன்கு கலந்து விட்டு கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். சுவையான இட்லி மற்றும் இட்லி சாம்பார் தயார். நன்றி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes