பொன்னாங்கண்ணிக் கீரை துவையல்/ சட்னி🌿

கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணிக் கீரை பலவித நோய்களை குணப்படுத்த உதவும் அற்புத உணவாகவும் மூலிகையாகவும் திகழ்கிறது.
காசம் புகைச்சல் கருவிழிநோய் வாதமனல்
கூசும் பீலீகம் குதாங்குர நோய் பேசி வையால்
என்னாங் காணிப்படிவம் எமம் செப்ப லென்னைப்
பொன்னாங்கண்ணிக் கொடியைப் போற்று.
என்ற அகத்தியரின் பாடல் பொன்னங்கண்ணிக் கீரையின் மருத்துவக் குணத்தைக் கூறுகிறது. இந்தப் பாடலின் பொருள் என்னவென்றால் பொன்னாங்கண்ணிக் கீரை காச நோய், இருமல், கண்நோய்கள், வெப்ப நோய்கள், வாத நோய்கள் போன்றவற்றை குணமாக்கக் கூடிய சிறந்த உணவாகும் என்பது தான்.
பொன்னாங்கண்ணிக் கீரை துவையல்/ சட்னி🌿
கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணிக் கீரை பலவித நோய்களை குணப்படுத்த உதவும் அற்புத உணவாகவும் மூலிகையாகவும் திகழ்கிறது.
காசம் புகைச்சல் கருவிழிநோய் வாதமனல்
கூசும் பீலீகம் குதாங்குர நோய் பேசி வையால்
என்னாங் காணிப்படிவம் எமம் செப்ப லென்னைப்
பொன்னாங்கண்ணிக் கொடியைப் போற்று.
என்ற அகத்தியரின் பாடல் பொன்னங்கண்ணிக் கீரையின் மருத்துவக் குணத்தைக் கூறுகிறது. இந்தப் பாடலின் பொருள் என்னவென்றால் பொன்னாங்கண்ணிக் கீரை காச நோய், இருமல், கண்நோய்கள், வெப்ப நோய்கள், வாத நோய்கள் போன்றவற்றை குணமாக்கக் கூடிய சிறந்த உணவாகும் என்பது தான்.
சமையல் குறிப்புகள்
- 1
பொன்னாங்கண்ணிக் கீரையை சுத்தம் செய்து, உப்பு & மஞ்சள் தூள் சேர்த்த தண்ணீரில் நன்கு அலம்பி எடுத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி,துவரம் பருப்பு,உளுத்தம் பருப்பு,கடலைப் பருப்பு,பச்சை மிளகாய்& காய்ந்த மிளகாய் பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
- 3
சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, பின்பு அதில் பொன்னாங்கண்ணிக் கீரையை சேர்த்து நன்கு வதக்கி, நான்கு பத்தை தேங்காய்,தேவைக்கேற்ப உப்பு,பெருங்காயம் சேர்த்து வறுத்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்து எடுக்கவும். அரைத்த துவையலில் சிறிது நல்லெண்ணெயில் கடுகு தாளித்து சேர்க்கவும்.
- 4
சூடான இட்லி,தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் ருசியாக இருக்கும். கண் பார்வைக்கு மிகவும் நல்லது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
🌿🌿அரைக்கீரை மசியல் 🌿🌿
#Nutrient 3 #bookஅரைக் கீரையில் இரும்புச் சத்து நிறைந்து காணப்படுகிறது. பொதுவாகவே கீரை வகையில் நார்ச்சத்தும் கிடைக்கப் பெறுகிறது.தொடர்ந்த அரைக்கீரை சாப்பிட்டு வருவதனால் நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாகிறது நம் ரத்தத்தையும் சுத்தம் செய்கிறது. Hema Sengottuvelu -
பொன்னாங்கண்ணி கீரை கடைசல்
உணவே மருந்து மருந்தே உணவு என்ற பழமொழி முழுக்க முழுக்க கீரைகளுக்குப் பொருந்தும். கீரையை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைப்பதுடன் பல நோய்களைக் குணப்படுத்தவும் முடியும்.பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் உள்ளன. BhuviKannan @ BK Vlogs -
மணத்தக்காளிக் கீரை துவையல்
#immunity #book மணத்தக்காளி கீரை நிறைந்த சத்துக்கள் உடையது. வயிற்றுப் புண்களை ஆற்றும். Vidhyashree Manoharan -
-
-
-
Turkey Berry Dip (Turkey Berry Dip recipe in tamil)
#arusuvai6சுண்டைக்காயில் உள்ள கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்க செய்யும். சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் சுண்டை வற்றலை பயன்படுத்தலாம்.ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புசளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிடவேண்டும். நோய் கட்டுப்படும். இது வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கும் இயல்புடையது. BhuviKannan @ BK Vlogs -
-
பீட்ரூட் கீரை பொரியல் (beetroot keerai poriyal recipe in Tamil)
#bookஊட்டி கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் பரவலாக கிடைக்கும் தவறாமல் வாங்கி செய்து பாருங்கள் நமது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் பார்ப்பதற்கு நமது தமிழ்நாட்டின் செங்காத்து கீரை பொரியல் போல் இருக்கும் ஆனால் ருசியில் தனித்துவம் வாய்ந்தது Sudha Rani -
-
மணத்தக்காளி கீரை பொரியல்🌿🌿🌿
#GA4 #week15( herbal) மணத்தக்காளி இலைச் சாற்றை35மிலி வீதம் நாள்தோறும் மூன்று வேளைகள் உட்கொண்டு வந்தால் சிறுநீரை பெருக்கும்; உடலில் நீர் கோர்த்து ஏற்படும் வீக்கம் ,உடல் வெப்பம் ஆகியவற்றை குணப்படுத்தும்.மணத்தக்காளி கீரை வாய்ப்புண்களை குணமாக்கும்அருமருந்து. Nithyavijay -
-
வல்லாரை கீரை பொரியல்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சத்துள்ள ஞாபக சக்தியை அதிகரிக்கக்கூடிய வல்லாரை கீரை பொரியல் Devi Bala Chandrasekar -
வல்லாரைக் கீரை துவையல்
#COLOURS2வல்லாரைக் கீரை துவையல் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் மூளைச் சோர்வை நீக்கி, ஞாபக மறதியைக் குணமாக்கும். Shuraksha Ramasubramanian -
-
முருங்கை கீரை துவையல்(murungaikeerai thuvayal recipe in tamil)
#KR - keeraiகீரை வகைகளில் மிகவும் சத்துக்கள் நிறைந்த கீரை முருங்கை கீரை.. எளிதில் கிடைக்க கூடிய முருங்கை கீரையில் நிறைய விதமாக சமையல் செய்து சாப்பிடலாம்... முருங்கை கீரை துவையலை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட மிக அருமையாக இருக்கும்... Nalini Shankar -
வெந்தயக் கீரை சட்னி(vendaya keerai chutney recipe in tamil)
கீரையை விரும்பாதவர்கள் கூட இந்த சட்னியை சாப்பிடுகிறார்கள் இவ்வாறு நீங்கள் வெந்தயக் கீரை சட்னி செய்து கொடுக்கும் போது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் mohammd azeez -
வாழைப்பூ, முருங்கை கீரை துவட்டல்
#lockdown #book எங்க தோட்டத்துல பரிச்ச கீரை, வாழைப்பூ. Revathi Bobbi -
-
-
💪💪பிரண்டை துவையல் #nutrient 1 #book
முன்பெல்லாம் எலும்பு முறிவு ஏற்பட்டால் பிரண்டையை நல்லெண்ணெயில் வதக்கி அந்த இடத்தில் கட்டுவர், ஏனெனில் பிரண்டை கால்சியம் நிறைந்தது. Hema Sengottuvelu -
ஹோட்டல் ஸ்டைல் பூண்டு சட்னி
#hotel இந்த ரெசிபி வீடியோ வடிவத்தில் காண search BK Recipes SG @ youtube channel BhuviKannan @ BK Vlogs -
🌿🌿முடக்கத்தான் கீரை சட்னி🌿🌿 (Mudakkathan keerai chutney recipe in tamil)
#leafஅதிக மருத்துவ குணம் உள்ள கீரை. Shyamala Senthil -
-
கிரீன் சட்னி
இது என் அம்மாவின் ரெசிபி இந்த சட்னியை நீங்கள் டிராவலிங் பயணம் செய்யும்போது கொண்டுசெல்லலாம் இந்த சட்னியை தேங்காய் சேர்க்காமல் அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்த வெரைட்டி ரைஸ் இருக்கும் பயன்படுத்தலாம் Farhu Raaz -
கீரை முட்டை பொரியல்
#mom பாலூட்டும் தாய்மார்கள் கீரை எடுத்துக் கொள்வது அவசியம் அந்த கீரையுடன் முட்டையை சேர்த்து கீரை முட்டை பொரியல் ஆக செய்துள்ளேன் Viji Prem -
ஆட்டுக்கல் மணத்தக்காளிக் கீரை துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காய்கறிகள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் உள்ள கீரையை வைத்து துவையல். Dhanisha Uthayaraj -
-
-
பாலக் கீரை அடை தோசை
#Queen - 1 - adai dosaiபாலக் கீரை சேர்த்து வித்தியாசமான சுவையில் செய்த காரசாரமான பச்சை நிற அடை தோசை.... Nalini Shankar
More Recipes
கமெண்ட்