நெல்லிக்காய் சாதம்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#lockdown
#Book
நமது அரசாங்கம் இப்போது ஊரடங்கு உத்தரவு போட்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் தேவைக்கு தட்டுப்பாடு இருக்கலாம். எனினும் நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான அதேசமயம் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவை தயாரித்து நாம் உண்பதே நமக்கு மிக்க நன்மை. அதனை கருத்தில் கொண்டு நான் என்னிடமிருந்த நெல்லிக்காய்களை வைத்து ஒரு சாதம் தயாரித்தேன். நெல்லிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கிறது. விட்டமின் C சத்து நிரம்பியது. மிகவும் சுவையான சத்தான நெல்லிக்காய் சாதம் எப்படி செய்வது என்று இப்போது பார்ப்போம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்  முதல் 30 நிமிடம்
2 நபர்கள்
  1. பெரிய நெல்லிக்காய் - 5 அல்லது 6
  2. தேங்காய் துருவியது - 1 கப்
  3. பச்சை மிளகாய் - 2 நீளவாக்கில் கீறியது
  4. நிலக்கடலை - 1 ஸ்பூன்
  5. கடலைப்பருப்பு - 1/2 ஸ்பூன்
  6. கறிவேப்பிலை -1 கொத்து
  7. மஞ்சள்தூள் -1/4 டீ ஸ்பூன்
  8. கடுகு உளுந்து - தலா 1/2 ஸ்பூன்
  9. வடித்த உதிரி சாதம் - 1 கப்
  10. எண்ணெய் -தேவையான அளவு
  11. உப்பு - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்  முதல் 30 நிமிடம்
  1. 1

    முதலில் நெல்லிக்காய்களை நன்கு கழுவிவிட்டு துருவி எடுத்துக் கொள்ளவும். தேங்காயையும் துருவி நெல்லிக்காய்துருவல் இருக்கும் அதே அளவிற்கு சமமாக தேங்காய் துருவலையும் எடுத்துக்கொள்ளவும்.

  2. 2

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் கடுகு உளுந்து தாளிக்கவும்

  3. 3

    பிறகு கடலைப் பருப்பை சேர்த்து வறுக்கவும். கடலைப்பருப்பு சிறிது சிவந்ததும் நிலக்கடலையை சேர்த்து வறுக்கவும்

  4. 4

    பிறகு பச்சை மிளகாயை சேர்த்து மிளகாய் வெள்ளையாக வதங்கும் வரை வதக்கி கறிவேப்பிலையை சேர்த்து விடவும்.

  5. 5

    பிறகு நெல்லிக்காய் துருவலை சேர்த்து அடுப்பை மிதமான தீயில்
    வைத்து 5 நிமிடம் வரை நன்கு வதக்கிக் கொண்டு இருக்கவும்.

  6. 6

    பிறகு தேங்காய் துருவலை சேர்த்து 3 நிமிடங்கள் வரை கிளறவும்

  7. 7

    பிறகு மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்

  8. 8

    பிறகு உதிரியாக வடித்த ஒரு கப் சாதத்தை அதில் சேர்த்து நன்கு கிளறவும்

  9. 9

    பிறகு உப்பு தேவையான அளவு சேர்த்து அடுப்பை மிதமான தீயிலேயே வைத்து 5 நிமிடங்கள் வைத்து இறக்கி சூடாக பரிமாறவும்

  10. 10

    நெல்லிக்காய் சாதம் மிகவும் சத்தானது, சுவையானது, எதிர்ப்பு சக்தி உள்ளது. இதற்கு ஏதாவது ஒரு துவையல் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes