நெல்லிக்காய் தொக்கு

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303

#GA4 #week 11 நெல்லிக்காய் தொக்கு தோசை, சப்பாத்தி போன்றதற்கு சைடு டிஸ்ஸாக சாப்பிடலாம்.நெல்லிக்காய் உடலிற்கு மிகவும் நல்லது.தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் உடலிற்கு எந்த தொந்தரவும் வராது.

நெல்லிக்காய் தொக்கு

#GA4 #week 11 நெல்லிக்காய் தொக்கு தோசை, சப்பாத்தி போன்றதற்கு சைடு டிஸ்ஸாக சாப்பிடலாம்.நெல்லிக்காய் உடலிற்கு மிகவும் நல்லது.தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் உடலிற்கு எந்த தொந்தரவும் வராது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 10நெல்லிக்காய்
  2. வரமிளகாய் தூள் 2 டீஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. தண்ணீர் 1 டம்ளர்
  5. நாட்டு சர்க்கரை 2 டீஸ்பூன்
  6. புளி கரைசல் சிறிதளவு
  7. நல்லெண்ணெய் 3 தேக்கரண்டி
  8. கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    நெல்லிக்காய் நன்றாக கழுவி கொள்ளவும்.ஒரு வானலியில் தண்ணீர் விட்டு நெல்லிக்காயை நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

  2. 2

    வேந்த நெல்லிக்காயை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.

  3. 3

    வானலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்

  4. 4

    தாளித்தில் அரைத்த நெல்லிக்காய் சேர்த்து அதில் வரமிளகாய் தூள், உப்பு,புளி கரைசல், நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து மூடி 5 நிமிடம் வேகவிடவும்.

  5. 5

    ருசியான நெல்லிக்காய் தொக்கு ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303
அன்று

Similar Recipes