செட்டிநாடு பேலஸ் ஸ்டைல் கருவேப்பிலை பூண்டு குழம்பு

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#book #lockdown
செட்டிநாட்டு உணவுகள் கண்ணுக்கும் நாவுக்கும் ஒரு சேர விருந்தளிப்பவை. அதேபோல் இந்த கருவேப்பிலை பூண்டு குழம்பு மிகவும் மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.
கருவேப்பிலையில் இரும்பு சத்தும் , பூண்டில் இரத்தம் சுத்தப்படுத்தும் தன்மையும் அதிகம் உள்ளது. இயற்கையாவே நம் தமிழ் உணவில் பூண்டும் கருவேப்பிலையும் தினமும் சேர்த்து கொள்வது வழக்கம். சூடான இட்லி தோசை என அனைத்திற்கும் பொருந்தும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2 குண்டு பூண்டு
  2. 2 பிடி கருவேப்பிலை
  3. 4டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  4. 1/2டீஸ்பூன் கடுகு
  5. 2 காய்ந்த மிளகாய்
  6. 1பொடியாக நறுக்கிய வெங்காயம்
  7. 1தக்காளி
  8. 1டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  9. 1டேபிள்ஸ்பூன் தனியாத்தூள்
  10. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  11. உப்பு தேவையான அளவு
  12. புளி எலுமிச்சை அளவு
  13. 1டேபிள்ஸ்பூன் வெல்லம்
  14. பெருங்காயத்தூள் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து பூண்டு மற்றும் கருவேப்பிலையை தனித்தனியே பொன்னிறமாக வறுத்து, அதை மிக்ஸியில் தனித்தனியே விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு காய்ந்த மிளகாய் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கி, பின்பு அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் அதில் தேவைக்கேற்ப உப்பு,மஞ்சள்தூள்,தனியா பொடி,மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, நிறம் மாறும் முன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

  3. 3

    குழம்பு கொதி வந்ததும் கரைத்த புளி மற்றும் வெல்லம் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்கவும்.

  4. 4

    பச்சை வாசனை போனவுடன் அரைத்த பூண்டு விழுது மற்றும் கருவேப்பிலை விழுதை சேர்த்து குழம்பை 5 நிமிடம் கொதிக்க விடவும்.

  5. 5

    கடைசியாக சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு,ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். சுவையான செட்டிநாடு பேலஸ் ஸ்டைல் கருவேப்பிலை பூண்டு குழம்பு ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes