பாலக் பக்கோடா

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#lockdown1
இந்த ஊரடங்கினால் கடைகள் மூடப்பட்டுள்ளது. அதனால் குழந்தைகளுக்கு திண்பண்டங்கள் கிடைப்பதில் சற்று சிரமமாக உள்ளது.
நான் என் குழந்தைக்கு பாலக் கீரையை பயன்படுத்தி பக்கோடா செய்து கொடுத்தேன். கீரை சாப்பிடாத குழந்தைகளும் இப்படி செய்து கொடுக்கும் போது சாப்பிட்டு விடுவார்கள். நன்றி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 minutes
3 பரிமாறுவது
  1. பாலக் கீரை 2 கப்
  2. பெரிய வெங்காயம் 2
  3. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  4. மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. கடலைமாவு 3/4 கப்
  7. அரிசி மாவு 1/4 கப்
  8. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 minutes
  1. 1

    வெங்காயம் நீளமாக கட் செய்து அவற்றை தனி தனியாக பிரித்து வைத்து கொள்ளவும். பாலக் கீரை சிறிதாக கட் செய்து 2 கப் எடுத்து கொள்ளவும்.ஒரு பவுலில் வெங்காயம் சேர்த்து உப்பு சிறிதளவு சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    இதில் நறுக்கி வைத்த கீரையை சேர்த்து மறுபடியும் கைகளால் பிசைந்து கொள்ளவும்.இதில் கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி பிசைந்து வைத்து கொள்ளவும்.

  3. 3

    வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடுப்பை மீடியமான தீயில் வைத்து கிளறி வைத்த மிக்ஸை சிறிது சிறிதாக பிரித்து போடவும்.பிறகு நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து கொள்ளவும்.பாலக் பக்கோடா தயார். நன்றி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes