வெண்டைக்காய் புளி குழம்பு

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#lockdown1
இந்த ஊரடங்கினால் தேங்காய் எங்கள் பகுதியில் கிடைப்பது சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் இன்று தேங்காய் பயன்படுத்தாமல் இந்த புளி குழம்பு செய்து உள்ளேன். நன்றி

வெண்டைக்காய் புளி குழம்பு

#lockdown1
இந்த ஊரடங்கினால் தேங்காய் எங்கள் பகுதியில் கிடைப்பது சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் இன்று தேங்காய் பயன்படுத்தாமல் இந்த புளி குழம்பு செய்து உள்ளேன். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35 minutes
3 பரிமாறுவது
  1. வெண்டைக்காய் 100 கிராம்
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. கறிவேப்பிலை சிறிதளவு
  5. புளி சிறிய எலுமிச்சை பழ அளவு
  6. உப்பு தேவையான அளவு
  7. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  8. மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
  9. குழம்பு மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  10. நல்லெண்ணெய் 2 மேசைக்கரண்டி
  11. கடுகு 1 ஸ்பூன்
  12. சீரகம் 1 ஸ்பூன்
  13. வெந்தயம் 1/4 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

35 minutes
  1. 1

    முதலில் வெண்டைக்காயை நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் நன்றாக துடைத்து வைக்கவும். பிறகு இதை ஓரளவு நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். வானலில் எண்ணெய் ஊற்றி இந்த காயை சேர்த்து நன்கு வழவழப்பு தன்மை போகும் வரை வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

  2. 2

    புளியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அலசி விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொள்ளவும். வானலில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    பிறகு தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு மசித்து விட்டு வதக்கி மிளகாய் தூள், குழம்பு பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்.பிறகு வதக்கி வைத்து உள்ள வெண்டைக்காய் இதில் சேர்த்து கிளறி விடவும்.

  4. 4

    பின்னர் புளியை நன்கு கரைத்து வடிகட்டி கரைசலை எடுத்து இதில் ஊற்றி கலந்து உப்பு, காரம் சரிபார்த்து கொதிக்க விடவும்.தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் போது சிறிதளவு வெல்லம் சேர்த்து கிளறி இறக்கவும். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes