முருங்கை இலை சூப்

KalaiSelvi G
KalaiSelvi G @K1109

#Lockdown 2
#Book
சூப் செய்ய காய்கறி எதுவும் இல்லாததால் தோட்டத்திலிருந்து முருங்கை இலை பறித்து சூப் செய்துவிட்டேன். உடம்புக்கு ஆரோக்கியமான சூப்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 பரிமாறுவது
  1. ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலை
  2. ஒரு சிட்டிகை மல்லித்தூள்
  3. ஒரு சிட்டிகை மிளகாய்த்தூள்
  4. ஒரு பச்சை மிளகாய்
  5. ஒரு சிட்டிகை சீரகத்தூள்
  6. 3 சின்ன வெங்காயம்
  7. 1/2 தக்காளி
  8. 2 பல்லு பூண்டு
  9. 1/2 இன்ச் இஞ்சி
  10. ஒரு ஸ்பூன் மிளகுத்தூள்
  11. சிறிதளவுகொத்தமல்லி இலை
  12. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் குக்கரில் வெங்காயம் தக்காளி மல்லித்தூள் மிளகுத்தூள் சீரகத்தூள் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு மற்றும் முருங்கை இலை அனைத்தையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு வேக வைக்கவும்.

  2. 2

    வேகவைத்து அதை வடிகட்டி தண்ணீரை எடுத்துவைத்து மீதி அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அரைத்த கலவையுடன் தண்ணீரைச் சேர்த்து அதில் மிளகுத்தூள் உப்பு மற்றும் மல்லி இலை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

KalaiSelvi G
அன்று

Similar Recipes