மலாய் காசி அல்வா/Malai Kasi Halwa

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#goldenapron3
சிலர் காசி அல்வாவில் பால் சேர்த்து செய்வதற்கு பதில் , வித்தியாசமாக துருவிய பன்னீர் சேர்த்து செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது.

மலாய் காசி அல்வா/Malai Kasi Halwa

#goldenapron3
சிலர் காசி அல்வாவில் பால் சேர்த்து செய்வதற்கு பதில் , வித்தியாசமாக துருவிய பன்னீர் சேர்த்து செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
  1. 1 கப் துருவிய நீர் பூசணிக்காய்
  2. 1/4 கப் துருவிய பனீர்
  3. 1/2 கப் சர்க்கரை
  4. 3டேபிள்ஸ்பூன் நெய்
  5. பொடியாக நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம்
  6. குங்குமப்பூ சிறிதளவு(பாலில் ஊறவைக்கவும்)
  7. 1சிட்டிகை ஏலக்காய் பொடி
  8. 1டேபிள்ஸ்பூன் சாக்லேட் சிரப்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் துருவிய நீர் பூசணிக்காயை சேர்த்து அதில் இருக்கும் தண்ணீர் வற்றும் வரை நன்கு வதக்கவும்.

  2. 2

    தண்ணீர் வற்றியவுடன் துருவிய பனீர் சேர்த்து நன்கு வதக்கவும். பன்னீரில் இருக்கும் தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்

  3. 3

    பூசணிக்காய் மற்றும் பன்னீர் வெந்தவுடன் அரை கப் சர்க்கரை மற்றும் பாலில் ஊற வைத்த குங்குமப்பூ சேர்த்து நன்கு கிளறி விடவும். ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும்.

  4. 4

    3 ஸ்பூன் நெய் சேர்த்து சர்க்கரை கரைந்து நன்கு இளகி, அல்வா பதம் வரும் போது அடுப்பை அணைத்து வேறு பாத்திரத்தில் மாற்றவும். முந்திரி மற்றும் பாதாமை பொடி செய்து அதன் மேல் தூவி அலங்கரிக்கவும்.

  5. 5

    வேண்டுமெனில் அதன் மேல் சிறிது சாக்லேட் சிரப் ஊற்றி பரிமாறவும். சுவையான மலாய் காசி அல்வா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes