வெண் பூசணி/காசி அல்வா(pumpkin halwa recipe in tamil)

நீர்ச்சத்து,நார்சத்து மிகுந்த வெண்பூசணியை,உணவில் சேர்த்தால்,நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும்.விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது.பூசணியை, கூட்டு,பொரியலாக சாப்பிட விருப்பமில்லை எனில்,இனிப்பான அல்வாவாகக் கூட செய்து சாப்பிடலாம்.
வெண் பூசணி/காசி அல்வா(pumpkin halwa recipe in tamil)
நீர்ச்சத்து,நார்சத்து மிகுந்த வெண்பூசணியை,உணவில் சேர்த்தால்,நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும்.விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது.பூசணியை, கூட்டு,பொரியலாக சாப்பிட விருப்பமில்லை எனில்,இனிப்பான அல்வாவாகக் கூட செய்து சாப்பிடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏலக்காயை இடித்துக் கொள்ளவும்.
- 2
வெண் பூசணியை துண்டுகளாக்கி,விதை நீக்கி,துருவிக் கொள்ளவும்.நீர்ச்சத்து மிகுந்த காயாதலால்,தண்ணீர் வெளியேறும்.
- 3
இதிலிருந்து முழுவதுமாக தண்ணீர் பிழியாமல்,கைகளால் அள்ளியவாறு 2கப் எடுத்துக் கொள்ளவும்.
*விரும்பினால்,தண்ணீர் முழுவதையும் பயன்படுத்தலாம். வெந்து தண்ணீர் வற்ற, சில நிமிடங்கள் அதிகமாகும்.
- 4
கடாயில்,1ஸ்பூன் நெய் விட்டு முந்திரி வறுத்து,அதே நெய்யில்துருவிய பூசணி சேர்த்து வேக விடவும்.
வேக வைக்க,அதிலிருக்கும் தண்ணீர் போதுமானது.
- 5
இதே சமயத்தில்,குங்குமப்பூ சேர்த்தால்,வேக வேக நிறம் மாறும்.
- 6
நன்றாக மசிந்து வெந்து தண்ணீர் வற்றியதும்,சர்க்கரை சேர்க்கவும்.சர்க்கரை கரைந்து கொதித்து,பூசணியுடன் சேர்ந்து 'திக்'ஆனதும், ஏலக்காய் மற்றும் 1ஸ்பூன் நெய் சேர்த்து கிளறவும்.
- 7
நெய் நன்றாக பூசணியுடன் சேர்ந்ததும்,மீண்டும் 1ஸ்பூன் அளவு நெய்(விருப்பத்திற்கேற்ப அளவைக் கூட்டி,குறைக்கவும்) சேர்த்து கிளறி,நெய் பிரிந்து வரும் போது வறுத்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்.
- 8
அவ்வளவுதான். சுவையான,வெண் பூசணி/காசி அல்லவா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
காசி அல்வா(kasi halwa recipe in tamil)
#clubஇது என்னுடைய 1000 வது ரெசிபி 7ம்தேதி மே மாதம் 2019 ம் வருடம் தொடங்கிய என்னுடைய இந்த பயணம் மிகவும் நன்றாக இருக்கிறது இந்த 4 வருடத்தில் எத்தனை வகையான உணவு முறைகள் எனக்கு தெரியாத பல உணவு முறைகளை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் தொடர்ந்து என்னை பாராட்டி ஊக்கப்படுத்தி பலவிதமான பரிசுகளை வழங்கும் குக்பேட் தலைமைக்கும் தொடர்ந்து விருப்பம் மற்றும் கருத்துக்களை தெரிவித்து என்னை எப்போதும் உற்சாகப்படுத்தும் நமது குழுவில் உள்ள அனைத்து சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் Sudharani // OS KITCHEN -
-
மலாய் காசி அல்வா/Malai Kasi Halwa
#goldenapron3 சிலர் காசி அல்வாவில் பால் சேர்த்து செய்வதற்கு பதில் , வித்தியாசமாக துருவிய பன்னீர் சேர்த்து செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
பூசணிக்கா அசோகா அல்வா(pumpkin ashoka halwa recipe in tamil)
#go - பூசணிக்காய்இது என்னுடைய 500 வது ரெஸிபி.. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அதனால் மஞ்சள் பூசணிக்கா வைத்து மிகவும் ருசியான அசோகா அல்வாவை என்னுடைய குக்கபாட் பிரெண்ட்ஸ் க்காக செய்துள்ளேன்.... Nalini Shankar -
-
-
-
-
-
-
மஞ்சள் பூசணி ஹல்வா(yellow pumpkin halwa recipe in tamil)
#DEHalloween டைம். எங்கே பார்த்தாலும் மஞ்சள் பூசணி, மஞ்சள் நிறம் பீட்டா கேரோடீன் இருப்பதால், விட்டமின் A, E ஏராளம் இதில் இருக்கும் லூயூடின் (lutein) கண்களுக்கு நல்லது. My recipes reflect my originality and creativity. Inspiration comes mostly from within. எனக்கு பிடித்த முறையில் நலம் தரும் பொருட்களை சேர்த்து செய்த ஹல்வா மிகவும் ருசியாக இருந்தது. ஆரம்பம் முதல் முடிவு வரை நான் மைக்ரோ வேவில் செய்தேன். நீங்கள் ஸ்டவ் மேல் செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
-
பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)
#GA4 பாலில் சர்க்கரை சேர்க்காமல் பால்கோவா செய்து பீட்ரூட்டை சேர்த்து செய்த அல்வா. Meena Ramesh -
*காசி ஹல்வா*(kasi halwa recipe in tamil)
ஹல்வா என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்வீட் ஆகும்.துருவின பூசணிக்காயுடன், கேரட்டையும் துருவி போட்டு வித்தியாசமான சுவையில் இந்த ஹல்வாவை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
சூஜி அல்வா
இது ஒரு இனிப்பான சுவை மிகுந்த வாழைப்பழம்,பால்,நெய் சேர்த்து செய்யப்பட்ட உணவு. Aswani Vishnuprasad -
பூசணிக்காய் அல்வா(poosanikkai halwa recipe in tamil)
#FRஇந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த அல்வா செய்து கொடுத்து உங்க குடும்பத்தார் உடன் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
-
-
-
*பாம்பே கராச்சி அல்வா*(bombay karachi halwa recipe in tamil)
@Geetabalu,சகோதரி கீதாஞ்சலி அவர்களின் ரெசிபியான, பாம்பே கராச்சி அல்வாவை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாகவும், செய்வது சுலபமாகவும், இருந்தது.@Geetabalu recipe #Diwali2021 Jegadhambal N
More Recipes
கமெண்ட் (6)