காசி அல்வா(kasi halwa recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

காசி அல்வா(kasi halwa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பேர்கள்
  1. 1 பெரியதுண்டுவெள்ளை பூசணிக்காய்- (துருவியது 1கப் வரும்)
  2. அரை கப்சர்க்கரை-
  3. 3ஏலக்காய்-
  4. 4முந்திரி-
  5. 6பாதாம் -
  6. 5 ஸ்பூன்நெய்-
  7. அரைஸ்பூன்மஞ்சள்(குழம்பு)பொடி -

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் வெள்ளை பூசணிகாயை துண்டுகளாக்கி துருவிக் கொள்ளவும்.துருவும் போது தண்ணீரும் சேர்ந்துதான் இருக்கும்.

  2. 2

    நான் துருவியது ஒரு பவுல் முழுவதும் இருந்தது.சர்க்கரை அரை பவுல்தேவைப்படும்.3 ஏலக்காய் தேவைப்படும்.ஏலக்காயை தட்டிக்கொள்ளவும்.

  3. 3

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் 2 ஸ்பூன் விட்டு பாதாம்,முந்திரியை வறுக்கவும்.அதை வேறு பாத்திரத்தில் எடுத்து வைத்துவிட்டு அந்த நெய்யிலேயே பூசணி துருவலைவதக்கிக்கொள்ளவும்.

  4. 4

    மஞ்சள்பொடி சேர்க்கவும்.மஞ்சள் வாசம் வராது.சர்க்கரை எடுத்துக் கொள்ளவும்.

  5. 5

    பூசணிக்காயில் தண்ணீர்பதம் குறைந்து நன்கு வெந்து இருக்கும்.பின்சர்க்கரைச் சேர்க்கவும்.நன்கு ஒட்டாமல் பிசுபிசு பதம் வரும் போது மேலும்கொஞ்சம் நெய்விட்டு கிளறிவிடவும்.ஏலக்காயை சேர்த்துவிடவும்.

  6. 6

    பின்வறுத்தநட்ஸ் சேர்த்து ஒன்று போல் மிக்ஸ்பண்ணிவிட்டு பின் வேறு பவுலுக்கு மாற்றவும்.

  7. 7

    சுவையான தித்திப்பான காசி அல்வா ரெடி.🙏😊நன்றி. மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes