பீப் பிரியாணி #nagercoil

Anita Benny
Anita Benny @cook_22315765

பீப் பிரியாணி #nagercoil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. முக்கால் வேக்காடு உப்பு போட்டு வேக வைத்த பீப் இறைச்சி-1/2kg
  2. ஜீரக சம்பா அரிசி -2cup
  3. பெரிய வெங்காயம் -2
  4. சின்ன வெங்காயம் -150gm
  5. தக்காளி-2
  6. தேங்காய் பால் -1cup
  7. பச்சை மிளகாய் -4
  8. கச கச,பட்டை ஊற வைத்து அரைத்தது-1tablespoon
  9. இஞ்சி பூண்டு விழுது -2tablespoon
  10. ஏலக்காய் -3
  11. கிராம்பு -3
  12. பிரிஞ்சி இலை -1
  13. சீரகம் -1teaspoon
  14. மிளகு தூள் -1/2tsp
  15. மஞ்சள் தூள்-1/2tsp
  16. வத்தல் தூள் -1tsp
  17. மல்லி தூள் -1tablespoon
  18. எண்ணெய் - 3 tablespoon
  19. நெய் -2tablespoon
  20. மல்லி தழை -2tablespoon (chopped)
  21. புதினா -1tablespoon (chopped)
  22. கிஸ்மிஸ் -10gm
  23. முந்திரி -10gm
  24. தண்ணீர் -2 1/2 cup
  25. தயிர்-3tablespoon
  26. எலுமிச்சை சாறு -1 tablespoon
  27. உப்பு-தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் எண்ணெய் விட்டு,எண்ணெய் காய்ந்ததும் ஏலக்காய்,கிராம்பு,பிரிஞ்சி இலை வதக்கவும்.பின்பு நறுக்கிய வெங்காயம்,சின்ன வெங்காயம் சேர்கவும்.தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி கூடவே தக்காளி சேர்க்கவும்.பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  2. 2

    அதன் பின் ஊற வைத்து அரைத்த கச கச பட்டை பேஸ்ட்,சீரகம்,மிளகு தூள்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    அதனுடன் மஞ்சள் தூள்,மிளகு தூள்,மல்லி தூள் சேர்த்து வதக்கவும்.புதினா இலை,மல்லி தழை சேர்த்து வதக்கி வேக வைத்த இறைச்சி சேர்த்து 3 நிமிடம் நல்ல வதக்கவும்.தயிர் சேர்க்கவும்.

  4. 4

    வதங்கிய பின் தேங்காய் பால்,தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
    நல்ல கொதித்ததும் அரிசி சேர்த்து,நெய் சேர்த்து கிளறி எலுமிச்சை சாறு சேர்த்து 2 விசில் வைத்து இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anita Benny
Anita Benny @cook_22315765
அன்று

Similar Recipes