தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி (Thalappakatti chicken biryani Recipe in Tamil)

#nutrient1 #book.பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள்.சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும்.

சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும் இப்பொழுது அதில். இப்பொழுது அதில் சிறிதளவு மஞ்சள் தூள் உப்பு ஒரு டேபிள்ஸ்பூன் வத்தல் தூள் தயிர் எலுமிச்சை பழம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். அதோடு சிறிதளவு நறுக்கிய மல்லி கீரையும் சேர்த்து அதை ஒரு மணி நேரம் ஊற விடவும்.
- 2
முதலில் இதற்கு மசாலா செய்வதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் 10 சின்ன வெங்காயம் 8 பல் பூண்டு 4 தக்காளி பூண்டு பச்சை மிளகாய் சிறிதளவு மல்லித்தழை ஒரு டேபிள்ஸ்பூன் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும். 2 கப்பு சீரக சம்பா அரிசியை ஊற வைக்கவும்.
- 3
இப்பொழுது ஒரு குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதோடு 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும் எண்ணை காய்ந்ததும் அதில் பட்டை கிராம்பு சோம்பு சீரகம் பிரியாணி இலை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வதங்கிய பின்பு அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- 4
மசாலா நன்றாக வதங்கிய பின் அதோடு சிறிதளவு மல்லிக்கீரை மட்டும் ஊறவைத்து வைத்திருக்கும் சிக்கனை அதோடு சேர்த்து இரண்டு விசில் வரும்வரை வேகவிடவும்.
- 5
இப்பொழுது விசில் அடிங்க பின்பு அதில் ஊற வைத்திருக்கும் அரிசியை மட்டும் மல்லிக்கீரை புதினா சேர்த்து அதன் மேல் மூடி வைத்து மேலே கனமான பாத்திரத்தில் தண்ணீர் வைக்கவும்.
- 6
இப்பொழுது 10 நிமிடம் கழித்து அரிசி நன்றாக வெந்தவுடன் அதில் நெய் சேர்த்து கிளறி விடவும்.
- 7
சுவையான தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி ரெடி. நன்றி
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்