கேரட் முள்ளங்கி ஊறுகாய்🥕🥕

#கேரட்#book
இந்த ஊறுகாய் செய்முறை மிகவும் எளிதானது. சுவையானதும் கூட. கேரட் மற்றும் முள்ளங்கி கொண்டு செய்த ஊறுகாய் ஆகும். சப்பாத்தி, தயிர் சாதம் போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். எப்போதும் போல் மாங்காய் எலுமிச்சங்காய் போன்றவற்றின் ஊறுகாய் செய்வதற்கு இது போன்ற காய்கறிகளிலும் ஊறுகாய் முயற்சி செய்து பார்க்கலாம்.😋🌶️🍛
கேரட் முள்ளங்கி ஊறுகாய்🥕🥕
#கேரட்#book
இந்த ஊறுகாய் செய்முறை மிகவும் எளிதானது. சுவையானதும் கூட. கேரட் மற்றும் முள்ளங்கி கொண்டு செய்த ஊறுகாய் ஆகும். சப்பாத்தி, தயிர் சாதம் போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். எப்போதும் போல் மாங்காய் எலுமிச்சங்காய் போன்றவற்றின் ஊறுகாய் செய்வதற்கு இது போன்ற காய்கறிகளிலும் ஊறுகாய் முயற்சி செய்து பார்க்கலாம்.😋🌶️🍛
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் கடுகு,ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் வரக்கொத்தமல்லி, ஒரு டீஸ்பூன் சோம்பு, கால் டீஸ்பூன் ஓமம் மற்றும் அரை டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து குறைவான தீயில் நன்கு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். இவற்றை ஆறவைத்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஊறுகாய் மசாலாத்தூள் இப்போது ரெடி. இதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பெரிய வாணலியில் கால் கப் எண்ணெய் ஊற்றி ஒரு சிட்டிகை பெருங்காயத் தூளை சேர்க்கவும். மற்றும் ஒரு இன்ச் பொடியாக அரிந்த இஞ்சி சேர்க்கவும்.அதனுடன் அரிந்த மூன்று பூண்டு பல் மற்றும் இரண்டாக அரிந்த 2 மிளகாய்களை சேர்த்து லேசாக வதக்கவும்.
- 3
இவற்றுடன் படத்தில் காட்டியுள்ளபடி நீளவாக்கில் அரிந்த ஒன்றரை கப் முள்ளங்கி மற்றும் கேரட்டை சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கவும். தொடர்ந்து காய்கள் லேசாக சுருங்கும் வரை வதக்கவும்.
- 4
இப்போது அடுப்பை குறைவான தீயில் வைக்கவும். இதில் அரைத்த ஊறுகாய் மசாலாவை சேர்க்கவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் கஷ்மிரி மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், அரை டீஸ்பூன் ஆம்சூர் தூள், மற்றும் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்க்கவும். இவை எல்லாம் ஒன்றுடன் ஒன்று நன்றாக கலக்கும் வரை கரண்டி கொண்டு கலந்து விடவும்.
- 5
எல்லாம் நன்றாக கலந்தவுடன் அடுப்பை நிறுத்தி விடவும். பிறகு 3 ஸ்பூன் வினிகரை அதில் சேர்க்கவும். வினிகர் சேர்ப்பதால் ஊர்காய் கெடாமல் இருக்கும்.மேலும் ஊறுகாய்க்கு புளிப்பு தன்மை தரும். இந்த ஊறுகாயை ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்திருந்து சாப்பிடலாம். தயிர் சாதத்திற்கும் சப்பாத்திக்கும் சரியான ஜோடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் முள்ளங்கி சாம்பார்🥕
#கேரட்கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது முள்ளங்கி நார்சத்து மிக்கது.கேரட், முள்ளங்கி இரண்டும் சேர்த்து பருப்பு சாம்பார் வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். சாப்பாட்டுக் மட்டுமல்லாமல் இட்லி தோசை சப்பாத்தி பூரி போன்றவைக்கு தொட்டுக்கொள்ளவும் மிகவும் அருமையாக இருக்கும்.😋 Meena Ramesh -
கேரட் பர்பி🥕
#carrot # bookகேரட் பர்பி சுவையான இனிப்பு வகைகளில் ஒன்றாகும். கேரட் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட இம்முறையில் செய்து கொடுத்தால் மிகவும் பிரியத்துடன் சாப்பிடுவார்கள். மேலும் கேரட் வளரும் குழந்தைகளுக்கு கண் பார்வைக்கு மிகவும் நல்லது. நெய், சர்க்கரை இரண்டும் மிகவும் குறைவான அளவிலேயே இதற்கு செலவாகும். Meena Ramesh -
ரேஷ்மி பனீர்🧀🌶️
#golden apron3 #book #immunityபால் பொருட்களில் ஒன்றான பனீர் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் குடைமிளகாய் இஞ்சி பூண்டு சேர்ப்பதால் உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். எதிர்ப்பு சக்தி அதிகரித்தால் எந்தக் கிருமி தொற்றும் ஏற்படாது ஆரோக்கியத்துடன் இருக்கலாம். அந்த ரேஷ்மி பனீர் ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் சுவையானதும் கூட.😋😍 Meena Ramesh -
கேரட் ஆனியன் ரவா ரோஸ்ட் 🥕🌰/suji
#carrot #goldenapron3 #book.இந்த செய்முறை படி ரவா தோசை செய்தால் மிகவும் ருசியாகவும், மொறுமொறுவென்று இருக்கும். மேலும் ஹோட்டல் ரவா தோசையை விட மிக அதிக சுவையாக இருக்கும்.இதற்காக ஹோட்டல் சென்று ரவா தோசை தேட வேண்டியது இல்லை.டிப்ஸ்: 1.ரவை , அரிசி மாவை விட பாதிப்பங்கு மைதா சேர்க்கவேண்டும்.2.ரவை, அரிசிமாவு மற்றும் மைதா மாவை வாணலியில் நன்கு சூடேற்றி வறுத்து கொண்டால் தண்ணீர் விட்டு கரைக்கும் போது மிக எளிதாக கட்டியே கட்டாமல் கரைந்துவிடும். பச்சை வாசமும் இருக்காது.3.வறுத்த மூன்று மாவையும் மிக்ஸியில் நன்கு ஒட்டிக் கொண்டால் தோசை ஊற்றும்போது மொறுமொறுப்பாக வரும்.4.மேலும் தோசை ஊற்றும் பொழுது அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக்கொண்டால் ஹோட்டலில் சுடுவது போல்போல் ஆங்காங்கே ஓட்டை உடன் வரும்.5.ஒரு சிட்டிகை சோடா மாவு சேர்த்துக் கொண்டால் தோசை சிவக்க வரும்.6.முந்திரிப்பருப்பு சேர்த்துக்கொண்டால் இன்னும் ரிச்சாக இருக்கும்.7.நெய் சேர்த்து கொண்டால் மொறு மொறுப்பு அதிகமாவது இல்லாமல் வாசமாகவும் சுவை கூடுதல் ஆகவும் இறுக்கும்.8. கூடுதலான அளவில் மாவை வறுத்து அரைத்து வைத்துக் கொண்டால், எப்போது வேண்டுமானாலும் இந்த கலவையை ஊறவைத்து, தோசை ஊற்றி கொள்ளலாம். Meena Ramesh -
கேரட் சட்னி🥕🌶️
#czarrot #bookகேரட் வைத்து செய்த சட்னி. இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிக மிக சுவையாக இருந்தது. நீங்களும் ஒருமுறை இதனை முயற்சி செய்து பார்க்கலாம்.கண்டிப்பாக இந்த கேரட் சட்னி இன்சுவை உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் ❤️. கேரட் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள். பூரி சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். டிப்ஸ்:1. தோல் சீவிவிட்டு செய்யவும். சட்னிக்கு நல்ல நிறம் கிடைக்கும்.2. கொஞ்சம் காரம் அதிகமாக சேர்க்கவும். சுவை அலாதியாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் க்கு ஏற்ற சட்னி. Meena Ramesh -
முள்ளங்கி கேரட் ஜூஸ்
#குளிர்#bookமுள்ளங்கி கேரட்டில் பல நண்மைகள் உள்ளன .நம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது .இதயம் வலு பெரும்.சிறுநீரகத்தில் உண்டாகும் கற்கள் கரைந்து சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும் .சுவாச பிரச்ச னைகள் நீங்கும் .நாம் இந்த காய்கறிகளில் ஜூஸ் செய்து பருகலாம் . Shyamala Senthil -
கேரட் வெஜிடபிள் பக்கோடா
கேரட் மிகவும் உடம்புக்கு நல்லது அதை மிகவும் சுலபமாகவும் மற்றும் மிகவும் சுவையாகவும் செய்வதற்கு இந்த ரெசிபியை செய்முறை காணலாம் வாங்க. ARP. Doss -
கேரட் சில்லி🥕🍟
#carrot காலிஃப்ளவர் மற்றும் மஸ்ரூம் சில்லி செய்வதைப்போல கேரட்டில் ட்ரை செய்தேன். மாலை நேர ஸ்னாக்ஸ் சூப்பராக ரெடியானது. Hema Sengottuvelu -
தஹி பராத்தா (dahi paratha)/curd
#goldenapron3 #book #lockdown2மதிய உணவிற்கு சமைக்க காய் கறிகள் இல்லை. தீர்ந்து விட்டது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் நினைத்த நேரத்தில் வெளியே செல்ல முடியாது.அதனால் வீட்டில் இருந்த கோதுமை மாவை வைத்து ஒரு கப் தயிர் பயன்படுத்தி இந்த தயிர் பராத்தா செய்தேன். மிகவும் மிருதுவாக இருந்தது.கூட மசாலா பொருட்கள் சேர்த்து செய்தேன். மணமும் சுவையும் அருமையாக இருந்தது. Meena Ramesh -
கேரட் ஸ்வீட் இடியாப்பம்#carrot #book
மாத்தியோசி இடியாப்பம் மாவுடன் கேரட், கலர்ஃபுல் கேரட் இடியாப்பம். Hema Sengottuvelu -
எலுமிச்சை பழ ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
#queen3எலுமிச்சை . பழங்கள் என் தோட்டத்து மரத்தில் இருந்து ஃபிரெஷ் ஆக பறித்தது. ரங்கபூர் லைம் என்று பெயர். அதனால் தான் அதை வளர்க்கிறேன். சுவை, சத்து, விட்டமின் c ஏராளம். ஊறுகாய் ஏஇது தயிர் சாதம், சப்பாத்தி, பரோட்டா, அடை கூட சாப்பிடுவேன். குட்டி சுட்டி மருமாள் இந்த என் ஊறுகாயை ரசித்து சாப்பிடுவாள் Lakshmi Sridharan Ph D -
பீட்ரூட் வடை😋
#immunity #book சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று பீட்ரூட். பீட்ரூட்டை எப்பொழுதும்போல் பொரியலாகச் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். நோய்த்தொற்று மிகுந்த இந்த காலகட்டத்தில் உடலுக்கு எதிர்ப்பு சக்தி திறன் அதிகம் தேவைப்படுகிறது. பீட்ரூட்டில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகம் உள்ளது .மேலும் இதில் சீரகம், இஞ்சி, வெங்காயம், புரத சத்து நிறைந்த பருப்பு வகைகள் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பீட்ரூட்டில் ஸ்நாக்ஸாக வடை செய்து கொடுத்தோம் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh -
-
சென்னா மசாலா 😍
#immunity #bookபூரி சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள தகுந்த கிரேவி மட்டுமல்லாமல் கொண்டைக்கடலை சேர்த்து செய்வதால் இது மிகவும் சத்தானதும் கூட. மேலும் இதில் இஞ்சி பூண்டு மஞ்சள் தூள் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவாகும்.💪.மிகவும் சுவையான சைடு டிஷ் ஆகும்😋 Meena Ramesh -
கோவைக்காய் பொரியல்
#GA4 Week26 #Pointedgourd கோவைக்காய் பொரியல் செய்வது எளிதானது. சுவையானதும் கூட. Nalini Shanmugam -
கோதுமை ரவை கிச்சடி🥕
#goldenapron3 #carrot#bookகோதுமை ரவை கிச்சடி. கோதுமை உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது மேலும் சர்க்கரை நோயாளிகள் உணவில் அரிசியை தவிர்க்க கோதுமையை எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.மேலும் இதில் கேரட் பீன்ஸ், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, வெங்காயம், சேர்ப்பதால் மேலும் இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.💪👍 Meena Ramesh -
ரவா கிச்சடி /கேரட் /சுஜி
#carrot #goldenapron3 எல்லோருக்கும் பிடித்தமான ஒரு உணவு ரவா உப்புமா. அதிலும் அதில் காய்கறிகள் சேர்த்து செய்தால் கிச்சடி ஆக மாறி சுவை கூடும். எல்லா விஷேஷங்களிலும் ரவா கிச்சடி கென்று ஒரு இடம் இருக்கும்.😍😋 Meena Ramesh -
தஹி சேமியா(தயிர் சேமியா)🍚
#nutrient1 # bookதயிர் பால் சம்பந்தப்பட்ட உணவு ஆகும். 100 கிராம் தயிரில் 11 கிராம் புரோட்டீன் உள்ளது. புரொடின் செரிந்துள்ளது மட்டுமல்லாமல் கால்சியம் சத்து ( 100gm/8./.) தயிரில் அதிகம் உள்ளது. விட்டமின் A அதிகம் உள்ளது. சோடியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், கோபாலமின், மெக்னீசியம் போன்ற இதர தாதுக்களும் இதில் உள்ளது. சாச்சுரேட்டட் கொழுப்பு 17 கிராமம் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு 8 கிராமம் உள்ளது. நல்ல கிருமி களை உருவாக்கி ஜீரண சக்திக்கு சிறப்பான உணவாக இருக்கிறது. பகலில் உணவில் தயிரை சேர்த்து கொள்வதை விட இரவில் சர்க்கரை சேர்த்தோ அல்லது கருப்பு மிளகு சேர்த்து சாப்பிடுவது ஜீரண மண்டலத்தை சாந்தப்படுத்தும்.பாலில் உள்ள புரதச்சத்தை விட தயிரில் புரதச் சத்து அதிகம் உள்ளது. Yogurt அல்லது தயிர் ஒரு சிறந்த probiotic ஆக செயல்படுகிறது. உடலில் நல்ல கிருமிகள் உருவாக காரணமாகிறது. இந்த நல்ல மற்றும் பயனுள்ளகிருமிகள் நம் அன்றாட செயல் திறனை ஊக்குவிக்கிறது. ஜீரண உறுப்புகளை இலகுவாக்கி மல பிரச்சினைகளை போக்குகிறது. வயிற்றுப்போக்கு சமயத்தில் மோர் தயிர் எடுத்துக் கொள்வது உடலுக்கு இழந்த நீர் சக்தியை சக்தியை மீட்டுக் கொடுத்து உடல் சோர்வை நீக்குகிறது.நாம் தினமும் நம் உணவில் கட்டாயம் தயிரினை சேர்த்துக்கொள்ளவேண்டும் குழந்தைகளுக்கும் தயிர் கொடுத்து சிறப்பான உணவு பழக்கத்தை உருவாக்கித் தர வேண்டும் . இந்த தயிர் சேமியாவில் முந்திரிபருப்பு, உலர் திராட்சை மாதுளை பழம் சேர்த்து செய்து இருப்பதால் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளது. Meena Ramesh -
சுஜி வெஜ் கட்லெட்
Lock-down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு வெளியில் எதுவும் தின்பண்டம் வாங்கி தரமுடியாது ..வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இனிப்பான மிகவும் சுவையான ஒரு கட்லட் செய்து கொடுத்தேன். Soundari Rathinavel -
Raw onion carrot raitha (Raw onion carrot raitha recipe in tamil)
#Pongalஇந்த தயிர் பச்சடி சாம்பார் சாதம், சப்பாத்தி, பிரியாணி, தக்காளி சாதம், பரோட்டா மற்றும் வெறும் சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். என் மகனுக்கு மிகவும் பிடித்த தயிர் பச்சடி இது. புளிக்காத தயிரில் செய்ய வேண்டும். Meena Ramesh -
#லாக் டவுன் ரெசிப்பிஸ்
எலுமிச்சைக்கு மாற்றாக மாங்காய் சாதம் செய்தேன். சுவையோ அசத்தல். Hema Sengottuvelu -
செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது Siva Sankari -
வெஜிடபிள் பிரியாணி🥕🍄🌽🥬🌰🥦🥒🌶️🥥
#Immunity #bookகேரட் பீன்ஸ் போன்ற காய்கறிகளும், இஞ்சி, பூண்டு, முந்திரி, வெங்காயம் மற்றும் பட்டை, கிராம்பு, போன்ற மசாலா சாமான்கள் எல்லாம் சேர்த்து இந்த பிரியாணியை செய்வதால், இது உடல்நலத்திற்கு நல்லது ,மேலும் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாகும்.. 1அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Meena Ramesh -
ஹெல்தி சாலட் ரப்
மிகவும் சுலபமான மற்றும் ஹெல்தியான முறையில் இந்த ரப்பை செய்திடலாம் . இது செய்முறை பார்க்கலாம் வாங்க.#book Akzara's healthy kitchen -
-
பீன்ஸ் சப்ஜி
#goldenapron3 #lockdown #bookஇந்த லாக் டவுன் நேரத்தில் பீன்ஸ் காய் கிடைத்தது. .அதை வைத்து இந்த புதுமையான சப்ஜி செய்தேன். இது போன்ற எமர்ஜென்சி காலத்தில் என்ன கிடைப்பதோ அதை வைத்து புதுமையாக செய்யலாம் .இதுவே பெண்களின் திறமை. Meena Ramesh -
-
பச்சை பட்டாணி தேங்காய் பால் சாதம்
#coconutபச்சை பட்டாணி அதிகமாகவும் கேரட் பீன்ஸ் குறைவாகவும் சேர்த்து தேங்காய் பாலில் செய்த சாதம். முழுவதும் தேங்காய் பாலில் செய்தேன்.தண்ணீர் கொஞ்சம் கூட சேர்க்காமல் தேங்காய்ப்பாலில் செய்வதால் நிறைய சாப்பிட முடியாது. திகட்டும். எனவே எப்போதும் செய்யும் அளவிற்கு குறைவாகவே செய்து கொள்ளவும்.அல்லது தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கூட நீங்கள் செய்து கொள்ளலாம். Meena Ramesh -
கேரட் மாங்காய் பச்சடி
#Carrot#Goldenapron3கேரட் மாங்காய் பச்சடி .பச்சடி எல்லா வகையான தாளித்த சாதத்திற்கும் ஏற்றது .All Time Favourite .எங்கள் வீட்டில் நடக்கும் அணைத்து விஷேசங்களிலும் இந்த பச்சடி இடம் பெரும் .சுவையோ அதிகம் .செய்து சுவைத்திடுங்கள் .😋😋 Shyamala Senthil -
இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪
#immunity #bookஇஞ்சி பூண்டு குழம்பு. இந்த குழம்பில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான அத்தனை பொருட்களும் உள்ளன. மேலும் இந்தக் குழம்பு நன்கு பசியைத் தூண்டும். வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். கபம், சளிக்கு மிகவும் நல்லது. எல்லா மருத்துவ குணங்கள் மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். 😋 எனக்கு மிகவும் பிடித்த குழம்பு ஆகும்😍. Meena Ramesh
More Recipes
கமெண்ட் (3)