எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 10 பலாக்கொட்டை
  2. 5 வற்றல் மிளகாய்
  3. 1/2 கப் தேங்காய் துருவல்
  4. 5 சிறிய வெங்காயம்
  5. 4 பல் பூண்டு
  6. 1டீஸ்பூன் ஜீரகம்
  7. கொஞ்சம் கறிவேப்பிலை
  8. தேவையானஅளவு உப்பு
  9. 2டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  10. ஒரு சிறிய துண்டு இஞ்சி

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு சீனச்சட்டி அடுப்பில் வைத்து அதில் பலாக்கொட்டையைப் போட்டு மீடியம் ஃப்ளேமில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    வறுத்த பலாக்கொட்டையை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  3. 3

    வற்றல் மிளகாயையும் சீனச் சட்டியில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

  4. 4

    அதே சீனச்சட்டியில் ‌‌2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து சிறிதாக வதக்கி எடுக்கவும்.

  5. 5

    மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், வறுத்த பலாக்கொட்டை, வற்றல் மிளகாய், ஜீரகம், வதக்கிய சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பும் சேர்த்து துவையல் பருவத்தில் அரைத்து எடுக்கவும்.

  6. 6

    மிகவும் சுவையான பலாக்கொட்டை துவையல் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (2)

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
பாலாக் கொட்டை வறுவல் தெரியும் first time துவையல் பாக்குறேன் சூப்பர்

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes