செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy Recipe in Tamil)

முட்டை புரதம் நிறைந்த ஒரு பொருள்.தினம் ஒரு முட்டை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.முட்டையில் உள்ள மஞ்சள் கரு சத்தான ஒன்று. முட்டையின் வெள்ளைக்கருவை சிலர் தலை முடி வளர்வதற்கும் பயன்படுத்துவர்.
#nutrient1
#ilovecooking

சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு முட்டைகளையும் அவித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு கிரேவிக்கு தேவையான மசாலா அரைத்துக் கொள்ளவும். தேங்காய்,சோம்பு, கசகசா, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணை விட்டு பிரியாணி இலை, கல்பாசி பூ,பட்டை ஆகியவற்றை போடவும். பிறகு வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளியை போட்டு வதக்கவும்.
- 3
தக்காளி வதங்கிய பின்பு உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்க்கவும். அனைத்தையும் நன்கு கலந்த பின் அரைத்து வைத்த மசாலாவை போட்டு நன்கு கொதிக்க விடவும்.
- 4
மசாலா நன்கு கலந்ததும் முட்டையை அதில் போட்டு நன்கு கிளறவும். இப்பொழுது சுவையான செட்டிநாடு முட்டை கிரேவி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்