எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 உருளைக்கிழங்கு
  2. 2 மீடியம் சைஸ் வெங்காயம்
  3. 1/4டீஸ்பூன் உப்பு
  4. 1 பச்சை மிளகாய்
  5. 11/2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
  6. கறிவேப்பிலை பொடியாக நறுக்கியது கொஞ்சம்
  7. மல்லித்தழை பொடியாக நறுக்கியது கொஞ்சம்
  8. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  10. 1/4 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  11. 2 சிட்டிகை உப்பு
  12. எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைக்கிழங்கை தோல் சீவி விட்டு கழுவி எடுத்து கிரேற்றரில் வைத்து துருவிக் கொள்ளவும்.

  2. 2

    வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும்.

  3. 3

    பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  4. 4

    துருவிய உருளைக்கிழங்கை கை வைத்து நன்றாகப் பிழிந்து அதிலுள்ள தண்ணீரை நீக்கி விட்டு உதிரி உதிரியாக ஆக்கிக் கொள்ளவும்.

  5. 5

    நறுக்கிய வெங்காயத்தில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.இப்படி பிசையும் போது வெங்காயத்தில் இருந்து தண்ணீர் ஊறி வரும்.அந்த தண்ணீரே போதுமானது.வேறு தண்ணீர் எதுவும் சேர்க்க தேவையில்லை.

  6. 6

    உதிரியான உருளைக்கிழங்குடன் நன்றாகப் பிசைந்த வெங்காயத்தை சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.

  7. 7

    இதனுடன் கடலை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள்,நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை, 2 சிட்டிகை உப்பும் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

  8. 8

    ஒரு கடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டில் வடை போல தட்டிப் போட்டு இருபுறமும் பொன்னிறமாக வேகும் வரை பொரித்து எடுக்கவும்.

  9. 9

    அருமையான சுவையில் உருளைக்கிழங்கு வடை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes