மாம்பழ கேசரி (Maambazha kesari Recipe in Tamil)

Navas Banu
Navas Banu @cook_17950579

மாம்பழ கேசரி (Maambazha kesari Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 11 மாம்பழம்
  2. 2 ஸ்பூன் நெய்
  3. 1/4 கப் முந்திரிப் பருப்பு
  4. சிறிதளவுகிஸ்மிஸ்
  5. 1 கப் ரவை
  6. 1/2 கப் சீனி (தேவைக்கேற்ப)
  7. சிறிதளவுஏலக்காய் தூள்
  8. 2 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மாம்பழத்தில் உள்ள தோலை நீக்கி விட்டு சதைப்பகுதியை நன்றாக குழைத்துக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் 1 ஸ்பூன் நெய் விட்டு முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் இரண்டையும் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

  3. 3

    அதே நெய்யில் ரவையை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

  4. 4

    ரவை பொன்னிறமாக மாறும் போது அடுப்பை அணைத்து விடவும்.

  5. 5

    கடாயில் மீண்டும் 1 ஸ்பூன் நெய் விட்டு பின் தண்ணீர் ஊற்றி அத்துடன் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

  6. 6

    தண்ணீர் நன்கு கொதித்ததும் வறுத்து வைத்துள்ள ரவையைக் கொட்டி கிளறவும்.

  7. 7

    ரவை வெந்ததும் சீனி சேர்த்துக் கிளறவும்.

  8. 8

    அடுப்பில் இருந்து இறக்குவதற்கு 2 நிமிடத்திற்கு முன் மாம்பழச் சதையை கொட்டி நன்றாகக் கிளறி இறக்கவும்.

  9. 9

    சுவையான கமகம மாம்பழ கேசரி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes