வெண்ணிலா கேக் (Vennila cake Recipe in Tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

வெண்ணிலா கேக் (Vennila cake Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

50 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1 கப்(75 கிராம்) மைதா மாவு
  2. 1 முட்டை
  3. 1/2 கப் சர்க்கரை பொடித்தது
  4. 1/2 கப் எண்ணெய் அல்லது உருக்கி ஆற வைத்த பட்டர்
  5. 1/4 கப் பால்,(காய்ச்சி ஆற வைத்தது)
  6. 1டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  7. 1/2டீஸ்பூன் பேக்கிங் சோடா
  8. 1 சிட்டிகை உப்பு
  9. 1/2டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

50 நிமிடம்
  1. 1

    மைதா மாவு உப்பு பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா எல்லாவற்றையும் சலித்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    மிக்ஸியில் பொடித்த சர்க்கரை முட்டை எண்ணெய் பால் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து 1-2 நிமிடம் அடித்து ஒரு கிண்ணத்தில் ஊற்றவும்.சலித்து வைத்திருக்கும் மாவை சேர்த்து கரண்டியால் நன்றாக கிளறவும்.(ரொம்ப நேரம் கிளற கூடாது).

  3. 3

    ஒரு கிண்ணத்தில் எண்ணெய் தடவி ஒரு ஸ்பூன் மைதா மாவை தூவி எல்லா இடத்திலும் பரப்பி விடவும். கலந்து வைத்திருக்கும் கலவையை இதில் ஊற்றவும்.

  4. 4

    அடுப்பில் குக்கரை வைத்து இரண்டு - மூன்று டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.கேக்கை ஊற்றி வைத்து இருக்கும் கிண்ணத்தை தண்ணீருக்குள் வைத்து குக்கரை மூடி (கேஸ்கட் விசில் தேவை இல்லை)மிதமான தீயில் 50 நிமிடம் வேக விடவும்.

  5. 5

    50 நிமிடம் கழித்து குக்கரை திறந்து ஒரு குச்சியை கவிட்டு பார்க்கவும்.வெந்து இருந்தால் அடுப்பை அணைக்கவும்.

  6. 6

    நன்றாக ஆறவிட்டு கத்தியால் வெட்டவும். வீட்டிலேயே குக்கரில் செய்த வெண்ணிலா கேக் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes