பீர்க்கங்காய் காரக்கறி (Peerkankaai kaara kari recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

பீர்க்கங்காய் காரக்கறி (Peerkankaai kaara kari recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பதினைந்து நிமிடங்கள்
பதினைந்து நிமிடங்கள்
  1. 1/2கிலோ பீர்க்கங்காய்
  2. 10சாம்பார் வெங்காயம்
  3. 5பல் பூண்டு
  4. 1டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  5. 1/2டீஸ்பூன் மல்லி தூள்
  6. தாளிக்க :
  7. தேவையான அளவுஉப்பு
  8. எண்ணை
  9. கடுகு
  10. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

பதினைந்து நிமிடங்கள்
  1. 1

    முதலில் பீர்கங்காயை நன்கு கழுவி, தோல் சீவி (லைன் போல் உள்ளதை மீட்டும் சீவி எடுத்தால் போதும்) பொடியாக நறுக்கவும்.

  2. 2

    வெங்காயம், பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கவும்.

  3. 3

    பின்னர் வாணலியில் எண்ணை ஊற்றி சூடு செய்து கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

  4. 4

    அத்துடன் வெட்டி வைத்துள்ள பீர்க்கங்காய் சேர்த்து வதக்கி, மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கி, உப்பு, கலந்து மூடிவைக்கவும்.

  5. 5

    பத்து நிமிடங்கள் கழித்து, திறந்து பொடியாக நறுக்கி வைத்துள்ள மல்லி இலை தூவி இறக்கவும். (விருப்பப்பட்டால் தேங்காய் துருவல் சேர்க்கவும்)

  6. 6

    இப்போது சுவையான, காரசாரமான பீர்க்கங்காய் காரக்கறி சுவைக்கத் தயார்.

  7. 7

    *இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். செய்வது மிகவும் எளிது. மிகவும் குறைந்த நேரத்தில் சமைத்து முடிக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes