முப்பருப்பு அடை தோசை (Mupparuppu adai dosai recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#arusuvai2
அடை தோசை என் அக்கா சொல்லி கொடுத்தார்கள் .இந்த அடை தோசை ஊற்றினால் வீடே மணக்கும். சுவையோ அதிகம் .சூடாக சாப்பிட்டால் இன்னும் ஒன்னு சாப்பிட தோன்றும் .😋😋

முப்பருப்பு அடை தோசை (Mupparuppu adai dosai recipe in tamil)

#arusuvai2
அடை தோசை என் அக்கா சொல்லி கொடுத்தார்கள் .இந்த அடை தோசை ஊற்றினால் வீடே மணக்கும். சுவையோ அதிகம் .சூடாக சாப்பிட்டால் இன்னும் ஒன்னு சாப்பிட தோன்றும் .😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20Mins
2 பரிமாறுவது
  1. 3/4 கப் புழுங்கல் அரிசி
  2. 1/4 கப் பச்சரிசி
  3. 1/4 கப் துவரம் பருப்பு
  4. 1/4 கப் பாசிப்பருப்பு,
  5. 1/4 கப் கடலை பருப்பு
  6. 1டேபிள் ஸ்பூன் உளுந்து பருப்பு
  7. 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  8. உப்பு
  9. 1டீஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 6சின்ன வெங்காயம்
  11. 1தக்காளி
  12. 3டீஸ்பூன் தேங்காய் துருவல்
  13. 1துண்டு இஞ்சி
  14. 1டீஸ்பூன் சோம்பு
  15. 5வரமிளகாய்
  16. 1 கை கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20Mins
  1. 1

    1/4 கப் துவரம் பருப்பு 1/4பாசிப்பருப்பு,1/4 கப் கடலை பருப்பு,3/4 கப் புழுங்கல் அரிசி1/4 கப் பச்சரிசி எடுத்து வைக்கவும்.

  2. 2

    உளுந்து பருப்பு 1 டேபிள் ஸ்பூன்,வெந்தயம் 1/2 டீஸ்பூன் சேர்த்து கழுவி 4 மணி நேரம் ஊறவிடவும்.

  3. 3

    கிரைண்டரில் அரைத்து மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் சேர்க்கவும்.வரமிளகாய் 5,சின்ன வெங்காயம் 6,இஞ்சி 1 துண்டு,சோம்பு 1 டீஸ்பூன் தேங்காய் துருவல் 3 டீஸ்பூன் எடுத்து வைக்கவும்.

  4. 4

    தக்காளி 1 நறுக்கி, தேங்காய் துருவல்,இஞ்சி,சோம்பு, வரமிளகாய்,உப்பு,சின்ன வெங்காயம் மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து அடைக்கு அரைத்த மாவுடன் சேர்க்கவும்.

  5. 5

    கறிவேப்பிலை 1 கை கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.

  6. 6

    காலை நேரம் ஆட்டிய மாவை இரவு அடை தோசையாக தோசைக்கல்லில் ஊற்றலாம். சுவையான வீடே மணக்கும் முப்பருப்பு அடை தோசை ரெடி. நாட்டு சர்க்கரை, வெண்ணெய் பொட்டுக்கடலை சட்னி செய்து தொட்டு சாப்பிடலாம்.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes