கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853

கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1.30 நிமிடங்கள்
3 பேருக்கு
  1. 200 கிராம்கோதுமை மாவு / மைதா மாவு
  2. 200 கிராம்சர்க்கரை - (பொடி செய்தது)
  3. 200 கிராம்வெண்ணை
  4. 2முட்டை
  5. 1/2 ஸ்பூன்பேக்கிங் பவுடர்
  6. 1/2 ஸ்பூன்பேக்கிங் சோடா
  7. 1/4 ஸ்பூன்வெண்ணிலா எசென்ஸ்
  8. 1/2 ஸ்பூன்உப்பு
  9. 1/2 ஸ்பூன்சமையல் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1.30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் முட்டையின் வெள்ளை கரு, மஞ்சள் கரு தனியாக எடுக்க வேண்டும்.

  2. 2

    வெள்ளை கருவை மட்டும் முட்டை கலக்கி கொண்டு நுரை வரும் வரை கலக்க வேண்டும்.

  3. 3

    இதனுடன் சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும்.

  4. 4

    பின் வெண்ணை சேர்த்து கலக்க வேண்டும்.

  5. 5

    கோதுமை மாவுடன் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை சேர்த்து சலித்து கலவையுடன் சேர்க்க வேண்டும்.

  6. 6

    பின் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும்.

  7. 7

    கலவையை காற்று நுரை இல்லாதவாறு கலக்க வேண்டும்.

  8. 8

    இவற்றை ஐந்து நிமிடம் தனியாக வைக்க வேண்டும்.

  9. 9

    கேக் செய்யும் மோல்டு டிரேயில் வெண்ணை கொண்டு கிரீஸ் செய்து அதான் மேல் பட்டர் பேப்பர் வைக்க வேண்டும்.

  10. 10

    கேக் கலவையை டிரேயில் பாதி அளவு நிரப்ப வேண்டும்.

  11. 11

    மைக்ரோ அவனில் 180 டிகிரி அளவில் 30 நிமிடங்கள் வைக்க வேண்டும்.

  12. 12

    கேக் வெந்தவுடன் வெளியில் எடுத்து அறை வெப்ப நிலையில் குளிர்விக்க வேண்டும்.

  13. 13

    பின் ட்ரேயை தலை குப்புற கவிழ்த்து கேக் ஐ வெளியில் எடுக்க வேண்டும்.

  14. 14

    இப்போது சுவையான கோதுமை கேக் ரெடி!

  15. 15

    மைக்ரோ அவன் இல்லாதவர்கள் குக்கரில் 1/4 பங்கு மணல் நிரப்பி ட்ரேயை அதான் மேல் வைத்து 1 மணி நேரம் சிம்மில் வைக்க வேண்டும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Saravanan
Meena Saravanan @cook_23486853
அன்று

Similar Recipes