சுரைககாய் நிலக்கடலை கூட்டு (Suraikkaai nilakadalai koottu recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பேர்
  1. 1கப் சுரைக்காய்
  2. 3 ஸ்பூன் நிலக்கடலை
  3. 1ஸ்பூன் சாம்பார் தூள்
  4. தூள் உப்பு தேவையான அளவு
  5. 1ஸ்பூன் எண்ணெய்
  6. 1/2ஸ்பூன் கடுகு
  7. 1/2ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  8. 1/4ஸ்பூன் பெருங்காயத்தூள்
  9. 1வர மிளகாய்
  10. கறிவேப்பிலை சிறிதளவு
  11. 1/2ஸ்பூன் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சுரைக்காயை தோல் சீவி விதை நீக்கி பொடியாக அறிந்து கொள்வோம். ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு உளுத்தம்பருப்பு பெருங்காயத்தூள் மற்றும் கிள்ளிய வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளவும். பிறகு பொடியாக அரிந்த சுரைக்காயை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். இப்போது ஒரு ஸ்பூன் சாம்பார் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  2. 2

    இவற்றில் தூள் உப்பு தேவையான அளவு சேர்த்து முக்கால் டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து காயை நன்கு வேகவைத்துக் கொள்ளவும். மூன்று ஸ்பூன் வறுத்த வேர்க்கடலையை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    வேகவைத்த காயில் அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். கரகரப்பாக அரைத்து வைத்த நிலக்கடலையை சேர்த்து நன்கு பிரட்டி விட்டு கொள்ளவும். சுரைக்காய் நிலக்கடலை கூட்டு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes