எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20mins
2 பரிமாறுவது
  1. 150கிராம் முட்டைக்கோஸ்
  2. 1கைப்பிடி காய்ந்த பட்டாணி
  3. 1சிறிய கேரட்
  4. உப்பு
  5. 1டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய்
  6. தாளிக்க
  7. 3டீஸ்பூன்ஆயில்
  8. 1/2டீஸ்பூன் கடுகு
  9. 1டீஸ்பூன் உளுந்து பருப்பு
  10. 1டீஸ்பூன் கடலை பருப்பு
  11. 1பச்சை மிளகாய்
  12. சிறிதுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20mins
  1. 1

    150 கிராம் முட்டைக்கோசை பொடியாக நறுக்கி கழுவி கொதிக்கும் தண்ணீரில் போட்டு வடித்து வைக்கவும். காய்ந்த பச்சை பட்டாணியை ஊற வைத்து குக்கரில் 3 விசில் வேகவிடவும். பட்டாணி வெந்தவுடன் வடித்து வைக்கவும். கேரட் 1 பொடியாக நறுக்கி வைக்கவும்.

  2. 2

    கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு 1/2 டீஸ்பூன் கடுகு,1 டீஸ்பூன் உளுந்து பருப்பு,1 டீஸ்பூன் கடலை பருப்பு நறுக்கிய 1 பச்சை மிளகாய் சிறிது கறிவேப்பிலை தாளித்து அதனுடன் வெந்த பச்சை பட்டாணி கேரட்டையும் சேர்த்து வதக்கி விடவும். கோஸ் வடித்து வைக்கவும்.

  3. 3

    பட்டாணி கேரட் வெந்தவுடன் வடித்து வைத்த முட்டைகோஸ் சேர்த்து தண்ணீர் சிறிது தெளித்து வேகவிடவும். தண்ணீர் வற்றிய உடன் துருவிய தேங்காய் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து பிரட்டவும்.

  4. 4

    சுவையான கோஸ் கேரட் பட்டாணி பொரியல் ரெடி.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes