முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

முள்ளங்கி உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியத்தை அளிக்க கூடிய காய்கறி. வாரம் ஒரு முறை முள்ளங்கியை சமையலில் பயன்படுத்தவும். #அறுசுவை5

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
  1. 100 கிராம்துவரம் பருப்பு
  2. 1/4கிலோமுள்ளங்கி
  3. 1தக்காளி
  4. 50 கிராம்சிறியவெங்காயம்
  5. குழிக்கரண்டிஎண்ணணெய்
  6. தாளிக்க-கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை
  7. 4வர மிளகாய்
  8. 1 தேக்கரண்டிசாம்பார் தூள்
  9. தேவையான அளவுஉப்பு
  10. தேவையான அளவுபுளிக்கரைசல்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முள்ளங்கியை தோல் சீவி சிறிய வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். துவரம்பருப்பை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு முள்ளங்கியை வதக்கிக் கொள்ளவும். வழுக்கிய முள்ளங்கியுடன் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும் வேகவைத்த பருப்பையும் அதனுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

  3. 3

    பிறகு வாணலியில் தேவையான அளவு உப்பு சாம்பார் தூள் மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும்

  4. 4

    முள்ளங்கி வெந்தவுடன் புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் பெருங்காயம் கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்.

  5. 5

    சுவையான மற்றும் ஆரோக்கியமான முள்ளங்கி சாம்பார் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes