தேவையான பொருட்கள்

30-45 mints
4-6 பரிமாறுவது
  1. அரைக்கிலோ காலிஃபிளவர்
  2. 5டேபிள்ஸ்பூன் மைதா
  3. 1-1/2டேபிள்ஸ்பூன் சோள மாவு
  4. 1டேபிள்ஸ்பூன் அரிசி மாவு
  5. 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 1டீஸ்பூன் சோயா சாஸ்
  8. 1டீஸ்பூன் தக்காளி சாஸ்
  9. 1டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு
  10. ஒரு கப் நறுக்கிய வெங்காயம்
  11. ரெண்டு டேபிள்ஸ்பூன் குடைமிளகாய்
  12. உப்பு
  13. எண்ணைய்

சமையல் குறிப்புகள்

30-45 mints
  1. 1

    காலிஃப்ளவரை சின்ன சின்னத் துண்டா கட் பண்ணி சுடுதண்ணியில் ஒரு 5 நிமிடம் வைக்கவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் மைதா சோள மாவு அரிசி மாவு இஞ்சி-பூண்டு விழுது மிளகாய்தூள் மிளகுதூள் சோயா சாஸ் உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலக்கவும்

  3. 3

    இந்தக் கலவையில் காலிஃப்ளவரை சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும்

  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் ஊற வைத்த காலிஃப்ளவரை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  5. 5

    மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் பூண்டு குடை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் அதன்பின் சோயாசாஸ் தக்காளி சாஸ் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்

  6. 6

    சிறிது சோள மாவில் தண்ணீர் கலந்து அந்த கலவையை இதனுடன் சேர்க்கவும்... 2 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்

  7. 7

    இப்போது பொரித்தெடுத்த காலிஃப்ளவரை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes