எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10mins
2 பரிமாறுவது
  1. 1கப் இட்லி அரிசி
  2. 1/4கப் துவரம்பருப்பு
  3. 2டேபிள் ஸ்பூன் உளுந்து பருப்பு
  4. 1டீஸ்பூன் வெந்தயம்
  5. உப்பு
  6. 1டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 6வரமளகாய்
  8. 2பெரிய வெங்காயம்
  9. 2டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
  10. 1டீஸ்பூன் சீரகம்
  11. 1/2டீஸ்பூன் மிளகு
  12. 1/4டீஸ்பூன்பெருங்காயம்
  13. 1கைப்பிடி கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

10mins
  1. 1

    1 கப் இட்லி அரிசி, 1/4 கப் துவரம் பருப்பு, 2 டேபிள் ஸ்பூன் உளுந்து பருப்பு, 1 டீஸ்பூன் வெந்தயம் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கழுவி நான்கு மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் நைஸாக அரைத்து வைக்கவும். மிக்ஸி ஜாரில் 2 டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய் 2 பெரிய வெங்காயம், 1 டீஸ்பூன் சீரகம்,1/2 டீஸ்பூன் மிளகு, 6 வரமிளகாய், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/4 டீஸ்பூன் பெருங்காயம் கறிவேப்பிலை ஒரு கைப்பிடி,உப்பு சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.

  2. 2

    அரைத்த விழுதை அரிசி மாவுடன் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.

  3. 3

    கார தோசைமாவு சிறிது புளிப்பு ஏறியவுடன் தோசைக்கல்லில் தோசையாக சுட்டு நெய் சேர்த்து இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். பொட்டுக்கடலை சட்னி வெண்ணெய் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.😘😘

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes