தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5பேர்
  1. 1 கப் கடலை மாவு
  2. 1/2கப் இட்லி மாவு
  3. 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  4. 1டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. உப்பு தேவையான அளவு
  6. தண்ணீர்
  7. மசால் தயாரிக்க :
  8. 5உருளை கிழங்கு
  9. 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  10. 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  12. 1/2 டீஸ்பூன் மாங்காய் பவுடர்
  13. 1 பெரிய வெங்காயம்
  14. கடுகு
  15. கடலை பருப்பு
  16. உப்பு

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    ஓரு பாத்திரத்தில் கடலை மாவு, இட்லி மாவு (வீட்டில் இட்லிக்கு அரைத்து வைத்துள்ள மாவு), மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலந்துவைக்கவும்.

  2. 2

    மசால் செய்ய உருளை கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து வைக்கவும்.வெங்காயம் பொடியாக நறுக்கிவைக்கவும்.

  3. 3

    கடாயில் கொஞ்சம் எண்ணை ஊற்றி, கடுகு, கடலை பருப்பு, வெங்காயம்,இஞ்சி, பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மாங்காய் பவுடர், உப்பு கலந்து இரண்டு நிமிடங்கள் வதக்கி, மல்லி இலை கலந்து வைக்கவும்.

  4. 4

    சூடாறியவுடன் சிறிய உருண்டைகளாக உருட்டி, தயார் செய்து வைத்துள்ள மாவில் பிரட்டி, கடாயில் எண்ணையை சூடு செய்து,பொரித்து எடுக்கவும்.

  5. 5

    இப்போது சுவையான உருளை கிழங்கு போண்டா சுவைக்கத்தயார். தக்காளி சாஸ் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes