கொய்யா இலை அல்வா

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai

கொய்யா இலை அல்வா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. தேவைக்கு கொய்யா இலை
  2. தேவைக்கு நாட்டுச்சக்கரை
  3. 4 ஸ்பூன் நெய்
  4. சிறிதளவுமுந்திரி
  5. சிறிதளவுதேங்காய்
  6. சிறிதளவுபிஸ்தா
  7. தேவைக்கு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேங்காய் முந்திரி பிஸ்தா ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது கொய்யா இலையை சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

  2. 2

    அரைத்து எடுத்த கொய்யா இலையில் இருந்து சாற்றை பிழிந்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் கார்ன் ஃப்ளார் மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும் அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும் அதில் கொய்யா இலை சாறை சேர்த்து கலந்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் நறுக்கி வைத்திருக்கும் தேங்காய் முந்திரி பிஸ்தா ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    இப்பொழுது கலந்து வைத்திருக்கும் கொய்யா இலை சாற்றை சேர்த்து அதோடு நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும்.

  5. 5

    கைவிடாமல் 20 நிமிடம் அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறவும்.

  6. 6

    சுவையான மற்றும் ஆரோக்கியமான கொய்யா இலைச்சாறு அல்வா ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Similar Recipes