எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2கப் மல்டி கிரெய்ன் மாவு
  2. 1/4தேக்கரண்டி உப்பு
  3. 1தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய்
  4. 3கப் வெந்நீர்
  5. மல்டி கிரெய்ன் மாவு தயாரிக்க
  6. 1/2கிலோ பச்சரிசி
  7. 100கிராம் வரகு
  8. 100கிராம் சாமை
  9. 100கிராம் திணை
  10. 100கிராம் கோதுமை
  11. 100கிராம் கேப்பை

சமையல் குறிப்புகள்

  1. 1

    பச்சரிசியைக் களைந்து காய வைக்கவும்.

  2. 2

    மற்ற தானியங்களை சுத்தம் செய்து தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.

  3. 3

    காய்ந்த பச்சரிசி, வறுத்த தானியங்கள் சேர்த்து மிஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும்.

  4. 4

    இந்த மல்டி கிரெய்ன் மாவில் இடியாப்பம் செய்யலாம்.

  5. 5

    இரண்டு கப் மல்டி கிரெய்ன் மாவில், உப்பு, தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.

  6. 6

    தேவையான அளவு வெந்நீர் சேர்த்துப் பிசைந்து இட்லித் தட்டில் இடியாப்பமாகப் பிழியவும்.

  7. 7

    பிழிந்ததை இட்லிப் பாத்திரத்தில் 5-7 நிமிடங்கள் வேக வைக்கவும்.

  8. 8

    இடியாப்பம் வெந்ததும் விருப்பமான சட்னி, சாம்பார் அல்லது கிரேவியுடன் பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
அன்று

Similar Recipes