தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. நாட்டுத் தக்காளி- 7
  2. பூண்டு-6
  3. வர மிளகாய்-3
  4. குருமிளகு-1டீஸ்பூன்
  5. சீரகம்-2டீஸ்பூன்
  6. கறிவேப்பிலை தேவையான அளவு
  7. கடுகு உளுந்து-அரை டீஸ்பூன்
  8. உப்பு -தேவையான அளவு
  9. எண்ணெய்- தேவையான அளவு
  10. ஒரு சிறிய எலுமிச்சை அளவு-புளி

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு கடாயில் தேவையான தண்ணீர் ஊற்றி இரண்டாக நறுக்கிய தக்காளியை போட்டு வேகவைக்கவும். பிறகு எலுமிச்சம்பழ அளவு புளியை ஊறவைக்கவும். தக்காளி வெந்து ஆறிய பிறகு தக்காளியையும் புளியும் நன்றாக கரைத்துக் கொள்ளவேண்டும்.

  2. 2

    மற்றொருகடாயில் எண்ணெய் ஊற்றிகாய்ந்ததும் அதில் கடுகு உளுந்தம், பூண்டை நன்றாக நசுக்கி கொள்ள வேண்டும்,கறிவேப்பிலை வரமிளகாய்,குரு மிளகு,சீரகத்தை அம்மியில் அரைத்துஅதையும் போட்டு வதக்க வேண்டும்.

  3. 3

    வதக்கிய பிறகு அதில் கரைத்து வைத்துள்ள தக்காளி புளிக்கரைசலை சேர்த்து அதனுடன் கொத்தமல்லி தழையை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி பரிமாற வேண்டும்.இப்பொழுது சுவையான தக்காளி ரசம் ரெடி.சூடான சாதத்திற்கு அருமையான அருமையாக இருக்கும். நன்றி நித்யா விஜய்.கோவை பாசக்கார பெண்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nithyavijay
Nithyavijay @cook_24440782
அன்று
Coimbatore

Similar Recipes