எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்களுக்கு
  1. ½ கப் மைதா
  2. 2+2ஸ்பூன் ரவை
  3. ½ ஸ்பூன் உப்பு
  4. 100 கிராம் உருளை
  5. 1 சிறிய கார்ட்
  6. 1 பச்சை மிளகாய்
  7. மல்லி இலை சிறிது
  8. 2 பீன்ஸ்
  9. 1/2 ஸ்பூன் சாட் மசாலா
  10. 2 ஸ்பூன் கடலை மாவு
  11. 250 மில்லி எண்ணெய்
  12. 1 வெங்காயம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி வைக்கவும்.....

  2. 2

    மைதா மாவு, உப்பு,ரவை, எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து 15 நிமிடங்கள் தனியே வைக்கவும்.

  3. 3

    உருளைக்கிழங்குடன் சேர்ப்பதற்காக வெங்காயம் பச்சை மிளகாய் மல்லி இலை கேரட் பீன்ஸ் போன்றவற்றை நறுக்கி வைக்கவும்

  4. 4

    உருளைக்கிழங்கை நன்கு மசித்து

  5. 5

    கேரட் பீன்ஸ் வெங்காயம் போன்றவற்றை மசித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து ரவை கடலைமாவு உப்பு சாட் மசாலா போன்றவையும் சேர்த்து நன்கு பிசையவும்

  6. 6

    பிசைந்த உருளைக்கிழங்கு கலவையை உருளை வடிவில் உருட்டி வைக்கவும்

  7. 7

    பிசைந்த மைதா மாவினை சப்பாத்தி போல நன்கு தேய்த்து அதில் சிறிய ரிப்பன் போன்ற துண்டுகளாக வெட்டி உருளைக்கிழங்கின் மீது சுருட்டவும்

  8. 8

    உருட்டிய உருளைக் கிழங்கினை எண்ணெயில் இரண்டு புறமும் பொன்னிறமாக பொரித்துஎடுக்கவும்

  9. 9

    இது மிகவும் வித்தியாசமான, சுவையில் இருக்கும்...... குழந்தைகள் விரும்பி சுவைப்பார்கள்.......

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
அன்று

Similar Recipes