கொத்து சப்பாத்தி

Bhagya Bhagya@dhanish Kitchen
Bhagya Bhagya@dhanish Kitchen @cook_25022647

#leftover

மீதமான சப்பாத்தி மற்றும் கிரேவி. மட்டன் /சிக்கன்/ வெஜிடபிள் எந்த கிரேவியும் பயன்படுத்தலாம் சுவையான கொத்து சப்பாத்தி செய்யலாம்

கொத்து சப்பாத்தி

#leftover

மீதமான சப்பாத்தி மற்றும் கிரேவி. மட்டன் /சிக்கன்/ வெஜிடபிள் எந்த கிரேவியும் பயன்படுத்தலாம் சுவையான கொத்து சப்பாத்தி செய்யலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 7 சப்பாத்தி
  2. 3 முட்டை
  3. 1 கேரட்
  4. 1 குடைமிளகாய்
  5. 1 வெங்காயம்
  6. 3 பச்சை மிளகாய்
  7. மீதமான மட்டன்/ சிக்கன்/ வெஜிடபிள் கிரேவி
  8. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  10. 1 டீஸ்பூன் கரம்மசாலா
  11. எண்ணெய் தேவையான அளவு
  12. உப்பு தேவையான அளவு
  13. கொத்துமல்லி இலை சிறிது
  14. 1 டீஸ்பூன் மிளகுத்தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும். சப்பாத்தியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    3 முட்டை எடுத்துக் கொள்ளவும். கடாயை சூடுபடுத்தி தேவையான எண்ணெய் சேர்த்து முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து பொறித்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு பாத்திரத்தில் தேவையான எண்ணெயை ஊற்றி நறுக்கி வைத்த காய்கறிகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்

  4. 4

    காய் வதங்கியபின் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

  5. 5

    எடுத்து வைத்திருந்த கிரேவி மற்றும் சப்பாத்தி துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  6. 6

    ஐந்து நிமிடம் மிதமான தீயில் மூடி வைத்து வேக வைக்கவும்

  7. 7

    கடைசியாக பொரித்த முட்டை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து ஐந்து நிமிடம் மிதமான தீயில் மூடி வைக்கவும்

  8. 8

    சுவையான கொத்து சப்பாத்தி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Bhagya Bhagya@dhanish Kitchen
அன்று
எனக்கு சமைப்பதில் மிகவும் ஆர்வம் அதிகம் புதிய புதிய ரெசிப்பீஸ் செய்து என் கணவர் மற்றும் குழந்தைக்கு கொடுப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. எனது கணவர் மற்றும் குழந்தை எனது சமையலை அதிகமாக பாராட்டுவார்கள் . அவங்களுக்கு நான் பண்ற எல்லா சமையலும் ரொம்ப பிடிக்கும்.😍😍😍
மேலும் படிக்க

Similar Recipes