சப்பாத்தி கேக்

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110

#leftover
மீதமான சப்பாத்தியில் நாட்டு சக்கரை சேர்த்து செய்த சப்பாத்தி கேக்

சப்பாத்தி கேக்

#leftover
மீதமான சப்பாத்தியில் நாட்டு சக்கரை சேர்த்து செய்த சப்பாத்தி கேக்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. மீதமான சப்பாத்தி - 3
  2. கோதுமை மாவு - 3ஸ்பூன்
  3. நாட்டு சக்கரை - 5ஸ்பூன்
  4. பால் - 100ml
  5. தயிர் -2ஸ்பூன்
  6. பேக்கிங் பவுடர் - 1ஸ்பூன்
  7. பேக்கிங் சோடா - 1/2 ஸ்பூன்
  8. கடலை எண்ணெய் - 4 ஸ்பூன்
  9. ஏலக்காய் தூள் -1/4 ஸ்பூன் (or) வெண்ணிலா எசன்ஸ் - 1/2 ஸ்பூன்
  10. முந்திரிப் பருப்பு - 5

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    மீதமான சப்பாத்திகளை சிறிய துண்டுகளாக வெட்டி மிக்சியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.. சப்பாத்தி அரைத்தது,3 ஸ்பூன் கோதுமை மாவு,5 ஸ்பூன் நாட்டுச்சக்கரை,100ml பால்,2ஸ்பூன் தயிர்,4 ஸ்பூன் கடலை எண்ணெய்,1 ஸ்பூன் பேக்கிங் பவுடர்,1/2 ஸ்பூன் பேகிங் சோடா,1/4 ஸ்பூன் ஏலக்காய் தூள்,(or)1/2 ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்,

  3. 3

    குக்கரில் ஸ்டாண்ட் போட்டு ஐந்து நிமிடம் சூடாக்கி வைத்துக்கொள்ளவும்,ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி லேசாக மாவு தூவவும்

  4. 4

    கலவையை எண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி சரி சமப்படுத்தவும், மாவின் மேலாக முந்திரிப்பருப்பை தூவலாம்,பிறகு குக்கரில் ஸ்டாண்டின் மீது வைத்து கேஸ்கட் விசில் போடாமல் மூடி வைத்து விடவும், அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்

  5. 5

    30நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து போர்க் அல்லது ஒரு குச்சியால் குத்தி பார்க்க வேண்டும் மாவு ஒட்டாமல் வந்தால் கேக் ரெடி, மாவு ஒட்டினால் 5 நிமிடம் கழித்து திறந்து பார்க்கவும்..

  6. 6

    பிறகு கேக் பாத்திரத்தை வெளியில் எடுத்து ஆறவிடவும்,கேக் ஆறியவுடன்,ஒரு தட்டில் கேக்கை எடுக்கவும், சப்பாத்தி கேக் தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shobana Ramnath
அன்று

Similar Recipes