ஸ்பின் வீல் சம்சா

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110

#leftover
மீதமான சப்பாத்தியில் செய்த ஈவினிங் ஸ்னாக்ஸ்

ஸ்பின் வீல் சம்சா

#leftover
மீதமான சப்பாத்தியில் செய்த ஈவினிங் ஸ்னாக்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. சப்பாத்தி - 2
  2. 2உருளைக்கிழங்கு வேக வைத்தது -
  3. பெரிய வெங்காயம் - 1
  4. பச்சை மிளகாய் - 1
  5. கருவேப்பி்லை - 1 கொத்து
  6. மிளகாய்த்தூள் - 1ஸ்பூன்
  7. கரம் மசாலா - 1ஸ்பூன்
  8. உப்பு - தேவையான அளவு
  9. மைதா மாவு - 2 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து வைத்துக் கொள்ளவும்,அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,கருவேப்பிலை, மிளகாய்த்தூள்,கரம் மசாலா,உப்பு,சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  2. 2

    மைதா மாவை தண்ணீர் கலந்து பேஸ்டாக (ஓரங்களை ஓட்டுவதற்கு) வைத்துக்கொள்ளவும், மீதமான சப்பாத்தியை எடுத்து,உருளைக்கிழங்கு கலவையை மேல்புறம் பரப்பி விடவும்,ஓரங்களை மைதா பேஸ்ட் வைத்து தடவவும், பின்னர் சப்பாத்தியை மெதுவாக ரோல் பண்ணவும்

  3. 3

    சப்பாத்தி ரோலை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்

  4. 4

    பின்னர் மைதா பேஸ்டில் ரெண்டு ஸ்பூன் தண்ணீர் கலந்து வைத்துக் கொள்ளவும்,ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானவுடன், சப்பாத்தி துண்டுகளை மைதா கலவை தண்ணீரில் நனைத்து வைத்துக் கொள்ளவும்

  5. 5

    பின்னர் எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் வேகும் வரை மிதமான தீயில் பொறித்து எடுக்கவும்,ஸ்பின் வீல் சம்சா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shobana Ramnath
அன்று

Similar Recipes