எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1/2கப் கோதுமை மாவு
  2. 1/4-1/2 மொசார்லோ சீஸ்
  3. 1/4 கப் தயிர்
  4. 1/4 கப் பொரித்த சிக்கன் (ஃப்ரைடு சிக்கன்)
  5. 1நீளவாக்கில் வெட்டிய வெங்காயம்
  6. 1நீளவாக்கில் வெட்டிய குடைமிளகாய்
  7. 2டீஸ்பூன் எண்ணெய்
  8. 1/4டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  9. 1 சிட்டிகை பேக்கிங் சோடா
  10. 1 சிட்டிகை உப்பு
  11. 1டேபிள்ஸ்பூன் பிஸ்சா சாஸ்
  12. சிறிதுசில்லி பிளக்ஸ்
  13. சிறிதுஆரிகனோ

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா,உப்பு,எண்ணெய்,தயிர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30நிமிடம் துணியால் மூடி வைக்கவும்

  2. 2

    பிசைந்து வைத்திருக்கும் மாவை தடிமனான வட்டமான சப்பாத்தி போல் உருட்டி கொள்ளவும்... பிறகு போக்கின் உதவியால் ஆங்காங்கே படத்தில் காட்டியவாறு குத்திக் கொள்ளவும்

  3. 3

    ஒரு அகலமான கடாயில் உப்பு கொட்டி அதன் மேல் ஒரு ஸ்டாண்ட் வைத்து 10 நிமிடம் ப்ரீ ஹீட் செய்யவும் பிறகு ஒரு தட்டில் வெண்ணை தடவி தேய்த்து வைத்த பீட்ஸா பேஸ்சை தட்டின் மேல் வைக்கவும்

  4. 4

    இப்போது இந்த தட்டை ப்ரீ ஹிட் பண்ண கடையில் வைத்து 3நிமிடம் குறைந்த தீயில் வேகவைக்கவும் பிறகு திருப்பிப் போட்டு 2 நிமிடம் வேக வைக்கவும்

  5. 5

    இப்போது பீட்ஸா பேஸ்சை எடுத்து அதன்மேல் பிட்ஸா சாஸ் படத்தில் காட்டியவாறு எல்லா இடங்களிலும் பரவுமாறு தடவிக் கொள்ளவும்

  6. 6

    இப்போது இதன் மேல் நீளவாக்கில் வெட்டிய வெங்காயம் நீளவாக்கில் வெட்டி குடைமிளகாயை படத்தில் காட்டியவாறு வைக்கவும் பிறகு இதன் மேல் பொரித்த சிக்கனை சேர்த்து அதன் மேல் சில்லி பிளக்ஸ், ஆரிகனோ, துருவிய சீஸை சேர்க்கவும் (சீஸ் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு சேர்த்துக்கொள்ளவும்)

  7. 7

    இப்போது இந்த தட்டை உப்பு சேர்த்த கடாயில் வைத்து மூடி போட்டு 10 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்

  8. 8

    இப்போது பீட்ஸா தயார் இதை நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு காய்கறிகள் அல்லது பன்னீர், என உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி செய்துகொள்ளலாம் மைதா மாவுக்கு பதிலாக நான் இதில் கோதுமை மாவு சேர்த்துள்ளேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes