ஹைதெராபாத் மஷ்ரூம் ஆலு பிரியாணி

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#cookwithfriends
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி நண்பர்கள் தினத்திற்கான வாரம் 3 இல் ஸ்பெஷல் மெயின் கோர்ஸ் வகை உணவு ஹைதெராபாத் மஷ்ரூம் ஆலு பிரியாணி.

ஹைதெராபாத் மஷ்ரூம் ஆலு பிரியாணி

#cookwithfriends
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி நண்பர்கள் தினத்திற்கான வாரம் 3 இல் ஸ்பெஷல் மெயின் கோர்ஸ் வகை உணவு ஹைதெராபாத் மஷ்ரூம் ஆலு பிரியாணி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
4 நபர்
  1. 2டீஸ்பூன் நெய்,
  2. 2பிரியாணி இலை,
  3. 2 ஏலக்காய்,
  4. 2 கிராம்பு,
  5. 1 பட்டை,
  6. 1 அண்ணாச்சி பூ,
  7. 2 பச்சை மிளகாய்,
  8. 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,
  9. 2 சின்ன தக்காளி,
  10. 200 கிராம் காளான்,
  11. 100 கிராம் உருளைக்கிழங்கு,
  12. 1 கப் கொத்தமல்லி இலைகள்,
  13. 1/2 கப் புதினா இலைகள்,
  14. 2 சில் தேங்காய்,
  15. 1 டீஸ்பூன் மிளகாய்தூள்,
  16. 1 டீஸ்பூன் கரம்மசாலா,
  17. 2 கப் அரிசி (400 கிராம்),
  18. தேவையானஅளவு உப்பு,
  19. 3 கப் அளவு தண்ணீர்,
  20. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    ஒரு குக்கரில் 3 டீஸ்பூன் எண்ணெய், 2 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் (பிரியாணி இலை, பட்டை, கிராம்பு,ஏலக்காய், அண்ணாச்சி) சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் 3 பெரிய வெங்காயம், 2 பச்சைமிளகாயை நீலமாக நறுக்கி சேர்க்கவும்.

  2. 2

    வெங்காயம் வதங்கியதும் 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.அடுத்து 2 சின்ன தக்காளியை சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும்.

  3. 3

    பின்னர் 200 கிராம் காளான் துண்டுகளை சேர்த்து3 நிமிடம் கழித்து உருளைக்கிழங்கை சேர்க்கவும்.

  4. 4

    அடுத்து கொத்தமல்லி, புதினா இலைகள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.2 சில் தேங்காயை மிக்ஸியில் அரைத்து மசாலாவை குக்கரில் ஊற்றவும்.

  5. 5

    இப்போது 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1 டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.

  6. 6

    இறுதியாக 3 கப் தண்ணீர் சேர்த்து, தண்ணீர் நன்றாக கொதித்ததும் 400கிராம் அரை மணி நேரம் ஊற வைத்த பாஸ்மதி அரிசி, சுவைக்கேற்ப உப்பு போட்டு குக்கரை மூடி அடுப்பை சிம்மில் வைத்து 1 விசில் வந்ததும் ஆப் செய்யவும்.சுவையான ஹைதெராபாத் ஸ்டைல் மஷ்ரூம் ஆலு பிரியாணி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aparna Raja
Aparna Raja @aparnaraja
அன்று

Similar Recipes